[X] Close

முதலில் ஸ்பெல்லிங்க தெரிஞ்சுட்டு பேசுங்க: காங்., தலைவரை கலாய்த்த தெலங்கானா அமைச்சர்


firstly-learn-to-spell-telangana-sir

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 Sep, 2018 11:55 am
  • அ+ அ-

தெலங்கானா விவகாரம் தொடர்பாக டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர ராவை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங்கை அக்கட்சியின் கே.டி.ராமாராவ் கலாய்த்திருக்கிறார்.

தெலங்கானாவுக்கு முன்கூட்டியே தேர்தல் நடக்கும் என்று நிலவிய யூகங்களை உறுதி செய்து, அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆட்சியை கலைத்தார். அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி முதல்வர் சந்திரசேகர ராவ் வழங்கிய கடித்தத்தை, தெலங்கானா மாநில ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.  

இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியை சந்திரசேகர ராவ் விமர்சித்திருந்தார்.

இது குறித்து திக்விஜய் சிங், "ராகுலுக்கு எதிராக கருத்து தெரிவித்த சந்திரசேகர ராவை கண்டிக்கிறேன். நன்றி கெட்ட மனிதர்! தெலங்கானாவைப் பெற்றுத்தந்தது காங்கிரஸ் கட்சி. ஆனால், இந்த மனிதர் காங்கிரஸ் தலைவருக்கு எதிராக அவதூறு பேசுகிறார். வெட்கப்படுங்கள் கேசிஆர். தெலங்கானா மக்கள் இதற்காக உங்களைத் தண்டிக்க வேண்டும்" என ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார். அதில் Telangana என்பதற்கு பதிலாக Telengana என எழுதியிருந்தார். 

இந்நிலையில் இது குறித்து தெலங்கானா அமைச்சரவையில் தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சராக இருந்த கே.டி.ராமாராவ், "முதலில் தெலங்கானாவுக்கு ஸ்பெல்லிங்க தெரிஞ்சிட்டு அப்புறம் பேசுங்க சார். இரண்டாவதாக தெலங்கானா காங்கிரஸ் கட்சியால் கொடுக்கப்படவில்லை. அது என்ன உங்களுக்கு பாத்தியப்பட்ட நிலமா நீங்கள் பிரித்து தருவதற்கு. டெல்லி சுல்தானின் அடிமைகளே" எனப் பதிவிட்டிருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close