[X] Close
 

காஷ்மீர் ரெய்டில் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து 8 சிறுமிகள் உட்பட 19 குழந்தைகள் மீட்பு


kashmir-ride

  • kamadenu
  • Posted: 08 Sep, 2018 18:26 pm
  • அ+ அ-

காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து எட்டு சிறுமிகள் உட்பட 19 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ''கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் நடத்தி வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்படுகின்றனர் என்னும் புகாரை அடுத்து, சோதனை நடத்தப்பட்டுள்ளது. 

ஆதரவற்றோர் இல்லத்தை நடத்தி வந்த ஆன்டனி தாமஸ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஆதரவற்றோர் மையத்தை நடத்துவது தொடர்பான எந்த ஆவணங்களையும் அவர் தாக்கல் செய்யவில்லை. 
ஆதரவற்றோர் இல்லத்தில் மொத்தம் 21 பேர் இருந்துள்ளனர். அதில் இருவர் தங்களுடைய சொந்த ஊரான பதான்கோட்டிற்குச் சென்றுள்ளனர். 

இல்லத்தில் இருந்த 5 முதல் 16 வயது வரையிலான சிறுவர்கள் பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்முவின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் தற்போது அரசு நடத்தி வரும் பால் ஆசிரமம் மற்றும் நாரி நிகேதனுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

மீட்கப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் மருத்துவ சிகிச்சையும் உளவியல் ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே ராஷ்ட்ரிய பஜ்ரங் தள அமைப்பினர், குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

[X] Close