இனி என் மகன் கிரிமினல் அல்ல: இணையத்தில் வைரலாகும் 'குடும்ப ஆதரவு' ஃபோட்டோ

குடும்ப ஃபோட்டோ தெரியும் அது என்ன குடும்ப ஆதரவு ஃபோட்டோ என்கிறீர்களா? அண்மையில் உச்ச நீதிமன்றம் தன்பாலின உறவு கிரிமினல் குற்றமாகாது எனக் கூறி சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவுக் குரல் பெருகியது.
இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த தன் பாலின உறவாளர் அர்னப் நாண்டி என்ற இளைஞர் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் நடுவில் அமர்ந்திருக்க இருபுறமும் தந்தையும் தாயும் உள்ளனர். தாய் மகனுக்கு அன்பு முத்தம் தர மூவரும் ஒரு பதாகையை தாங்கியுள்ளனர். அதில். "எனது மகன் இனியும் கிரிமினல் குற்றவாளி" அல்ல என எழுதப்பட்டிருக்கிறது.
தன் பாலின உறவு சட்டபூர்வமானது என அறிவிக்கவே இத்தனை ஆண்டுகள் ஆன நிலையில் தன் பாலின உறவாளரை குடும்பத்தினரே ஆதரித்து பதாகை ஏந்தி போஸ் கொடுத்திருக்கும் இந்த ஃபோட்டோ வைரலாகிக் கொண்டிருக்கிறது. குடும்ப ஃபோட்டோ குடும்ப ஆதரவு ஃபோட்டோவனது இப்படித்தான்.