[X] Close
 

தவறுகள் சகஜம்!- பலாத்கார விவகாரத்தில் மகளிர் ஆணைய தலைவரின் சர்ச்சைக் கருத்து


mistakes-do-happen-kerala-women-commission-chief-on-rape-charges-against-mla

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Sep, 2018 15:25 pm
  • அ+ அ-

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,வுக்கு ஆதரவான தொணியில் கேரள மாநில மகளிர் ஆணையத் தலைவர் தெரிவித்திருக்கும் கருத்து சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

கேரள மாநிலம் சொர்னூர் தொகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ., பி.கே.சசி மீது இளம் ஒருவர் பலாத்கார புகார் கூறியிருக்கிறார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த அந்தப் பெண் சசி மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் சீதாராம் யெச்சூரிக்கே கடிதம் எழுதியிருக்கிறார்.
கேரளாவில் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இந்த விவாகரத்தில் சசி கைதை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக மாநில மகளிர் ஆணைய தலைவர் பேசியிருப்பது இன்னும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

எம்.எல்.ஏ., சசி மீதான பாலியல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கேரள மாநில மகளிர் ஆணையத் தலைவர் எம்.சி.ஜோஸ்பின், "பலாத்காரம் புதிதல்ல. நாம் அனைவரும் மனிதர்களே. தவறுகள் செய்வது சகஜம். கட்சிக்குள் இருக்கும் சிலரும் இதுபோன்ற தவறுகளை செய்திருக்கலாம். அது கட்சி சார்ந்த சர்ச்சை. இதை எப்படி கையாள்வது என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டதிட்டங்களில் இருக்கும். கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து இது போன்ற புகார்கள் வந்துகொண்டுதன் இருக்கின்றன. எங்களுக்கு இதுவரை எந்தப்புகாரும் வரவில்லை. நாங்களாக முன்வந்து வழக்கை கையில் எடுக்க வேண்டும் என்றாலும்கூட சில அடிப்படைத் தகவல்கள் வேண்டும். அதை ஒன்று பாதிக்கப்பட்டவர் சொல்ல வேண்டும் இல்லை ஊடகங்களிலாவது வெளியாகி இருக்க வேண்டும். அப்படி எதுவுமே இல்லாத போது எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்" எனக் கூறினார்.

அவரது இந்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close