[X] Close

உயிரோடு உள்ள சோனாலிக்கு அஞ்சலி ட்வீட்: மீண்டும் சர்ச்சையில் எம்.எல்.ஏ., ராம் கதம்


bjp-lawmaker-trolled-for-sonali-bendre-tweet

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Sep, 2018 12:55 pm
  • அ+ அ-

எந்த பெண் என்று என்னிடம் கூறுங்கள் உங்களுக்காக அந்தப் பெண்ணை கடத்திவிடுகிறேன் என்று கூறி சர்ச்சைக்குள்ளான பாஜக எம்.எல்.ஏ., ராம் கதம், ஒரு ட்வீட்டால் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையில் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள காட்கோபர் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ ராம் கதம். 

இவர் நேற்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் மராத்தியில் ஒரு ட்வீட்டை பதிவு செய்தார். 
அதில், "இந்தி, மராட்டிய சினிமாக்களில் ஆதிக்கம் செலுத்திய சோனாலி பெந்த்ரே நம்மைவிட்டுப் பிரிந்தார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" எனப் பதிவு செய்திருந்தார்.

ஊடகங்களிலே வராத செய்தியை அவர் தனது ட்விட்டரில் பகிர சில நிமிடங்களிலேயே அது உண்மையல்ல எனத் தெரியவந்தது.

எல்லோரும் வறுத்தெடுக்க உடனே அந்த ட்வீட்டை டெலீட் செய்தார்.

இதுதான் அவர் டெலீட் செய்த ட்வீட்

சில நிமிடங்களில், இன்னொரு ட்வீட்டில், "சோனாலி பெந்த்ரே தொடர்பான அந்த செய்தி வதந்தி. அவர் உடல் நலம் பெற நான் இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்" எனப் பதிவிட்டார்.

அன்று செல்ஃபோன் எண்ணைக் கொடுத்த எம்.எல்.ஏ.,
கடந்த வாரம் தனது தொண்டர்கள் மத்தியில் ராம் கதம் பேசும்போது, "நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எனக்கு தொலைப்பேசியில் அழைக்கலாம். நீங்கள் எனக்கு செல்போனில் கால் செய்து, நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன், அதற்கு உங்களுடைய உதவி தேவை என்று கூறுங்கள். அதன்பின் நான் பார்த்துக்கொள்கிறேன்.

உங்கள் காதலைப் பற்றி உங்கள் பெற்றோரிடம் பேசுகிறேன், அவர் சம்மதித்து நீங்கள் காதலிக்கும் பெண்ணையும் அவர்களுக்குப் பிடித்துவிட்டால்,அந்தப்பெண் யாராக இருந்தாலும் நான் கடத்திவந்து உங்களிடம் கொடுத்து விடுகிறேன். என்னுடைய செல்போன் எண்ணை குறித்துக்கொள்ளுங்கள்" என்று கூறி தனது செல்போன் எண்ணை அளித்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close