[X] Close
 

அத ஜட்ஜ் ஐயா சொல்வாரு.. அலட்சியமாக பதில் சொன்ன விஜய் மல்லையா


judge-will-decide-vijay-mallaya

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Sep, 2018 10:57 am
  • அ+ அ-

கொஞ்ச நஞ்சம் இல்லீங்க ரூ.9000 கடன். அத்தனையும் பொதுத்துறை வங்கிகளில் பெற்றது. எதையுமே திருப்பி செலுத்தாம லண்டனுக்கு தப்பி ஓட்டிய 'தொழிலதிபர்' விஜய் மல்லையாகிட்ட பிரிட்டிஷ் ஊடக்ககாரர் ஒருவர் "நீங்க எப்ப இந்தியாவுக்கு போவீர்கள்" என்று கேட்டதற்கு, "அதை ஜட்ஜ் சொல்வார். நான் கிரிக்கெட் பார்க்க வந்தேன். இங்கே மீடியா பேட்டி கொடுக்க வரவில்லை. நீங்கள் அதைப் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். நன்றி.. பைபை" என்றார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. போட்டியை காண ஓவல் மைதானத்துக்கு வந்த மல்லையா இவ்வாறு கூறிவிட்டு சொகுசு காரில் ஏறிச் சென்றார்.

 

— ANI (@ANI) September 8, 2018

 

அவர் இதை சொன்னவிதம் அத்தனை அலட்சியமாக இருந்தது.

விவசாயிகள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்யும் நாட்டில்தான் விஜய் மல்லையாவும் பிறந்தார் என்பது வேதனையான விஷயம்.

எவ்வளவு சுருட்டினார் மல்லையா?

பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடினார். அவர் மீது பல்வேறு வங்கிகள் சார்பில் தொடர்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாகவும் அ றிவிக்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்யவும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது ரூ.13,900 கோடி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது.

லண்டனில் உள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி, இங்கிலாந்து நீதீமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான வழக்கு பிரிட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close