[X] Close
 

தன்பாலின உறவு எச்ஐவியை அதிகரிக்கும்; இது பரம்பரைக் குறைபாடு: சு.சுவாமி விளாசல்


homosex-act-is-a-genetic-flaw-subramanian-swamy

  • பாரதி ஆனந்த்
  • Posted: 06 Sep, 2018 15:02 pm
  • அ+ அ-

தன்பாலின உறவென்பது பரம்பரைக் குறைபாடு. அந்த குறைப்பாட்டுடன் பிறந்தவரால் மட்டுமே அதில் ஈடுபட முடியும் என பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி கூறியிருக்கிறார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், "அடுத்தவர் படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் உரிமை நமக்கு இல்லை. ஆனால், அதற்காக தன்பாலின உறவை இயற்கையான உறவுமுறைக்கு ஈடாக உயர்த்திப்பிடிப்பதை ஏற்க முடியாது. தன்பாலின உறவென்பது பரம்பரைக் குறைபாடு. அந்த குறைப்பாட்டுடன் பிறந்தவரால் மட்டுமே அதில் ஈடுபட முடியும். அதைவிடுத்து தனிநபரின் தெரிவு உரிமை என்று சொல்வதெல்லாம் பிதற்றல்.

தன்பாலின உறவை ஆதரிப்பதால் எச்ஐவி நோய் அதிகரிக்கும். கே பார்கள் (Gay Bars) உருவாகும். ஃபீடோஃபைல் எனப்படும் குழந்தைகளை வன்புணர்பவர்கள் உருவாவார்கள்.

2013-ல் 2 நீதிபதி அமர்வு வழங்கிய தீர்ப்பை 5 நீதிபதி கொண்ட அமர்வு நிராகரித்தது. இந்த தீர்ப்பை மேல்முறையீடு செய்யலாம். 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும்" என்றார்.

கிண்டல் ட்வீட்:

இதுதவிர தனது ட்விட்டர் பக்கத்தில் "சட்டப்பிரிவு 377-ல் மிருகங்களுடன் உடல் உறவு கொள்வது குற்றம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுவும்கூட உங்கள் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதா எப்படி?" எனக் கிண்டலாக ஒரு ட்வீட் பதிவிட்டிருக்கிறார்.

தீர்ப்பு விவரம்:

தன்பாலின உறவு என்பது சட்டவிரோதமல்ல, ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட விதிகள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஒரே பாலினத்தைச் சேர்ந்த வயது வந்த இருவர் உடல் ரீதியான உறவு கொள்வது சட்டப்படி குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ல் கூறப்பட்டுள்ளது. இதை ரத்து செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், இந்த உத்தரவை ரத்து செய்து 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

"தன்பாலின உறவு சட்ட விரோதமா, இல்லையா என்பதை நீதிமன்றமே தனது சட்ட அறிவின் மூலம் முடிவெடுக்கலாம்" என்று கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close