[X] Close

அதுவரை யாருக்கும் தெரியாது அவர் லோட்மேன் அல்ல மாவட்ட ஆட்சியர் என்று!


the-story-of-kannan-gopinathan-ias

  • பாரதி ஆனந்த்
  • Posted: 06 Sep, 2018 13:45 pm
  • அ+ அ-

கேரள மழை வெள்ள மீட்பு நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட பல மழை முகங்களை நாம் அடையாளப்படுத்தியிருக்கிறோம். அந்த வரிசையில் மற்றுமொரு மழை முகம் கண்ணன் கோபிநாத் ஐ.ஏ.எஸ். பற்றி பகிர்கிறோம்.

எர்ணாகுளம் மாவட்டத்தில் நிவாரணப் பொருட்களை இளைஞர் ஒருவர் கவனமாக ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் ஒய்.சஃபிருல்லா அந்த இளைஞரை அடையாளம் கண்டுவிட்டார்.
நீங்கள் கண்ணன் தானே என்று கேட்க ஆமாம் எனக் கூறியிருக்கிறார். அப்புறம்தான் அந்த நிவாரண முகாமில் இருந்த அனைவருக்குமே தங்களோடு லோடுமேன் போல் பணியாற்றிக் கொண்டிருந்த இளைஞர் கண்ணன் கோபிநாதன் ஐஏஎஸ், தாதர் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் ஆட்சியர் என்பதும் தெரியவந்தது.

கேரளாவுக்கு கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி வந்திறங்கினார் கண்ணன். அன்றுமுதல் பல்வேறு நிவாரண முகாம்களுக்கும் சென்று அங்கு தன்னால் இயன்ற உதவிகளை சத்தமில்லாமல் செய்து வந்திருக்கிறார்.

எர்ணாகுளம் ஆட்சியரால் அடையாளம் காணப்பட்ட அவர் தற்போது ஊடக வெளிச்சத்துக்கும் வந்துள்ளார். 
ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், "நான் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவன். 2012-ல் ஐஏஎஸ் அதிகாரியானேன். தற்போது தாதர் நாகர் ஹவேலியில் பணியில் உள்ளேன். கேரளாவில் மழை வெள்ளம் ஏற்பட்டபோது எனது சொந்த மாநில மக்கள் துயரத்தில் இருக்கும்போது நான் அங்கு இல்லாமல் போய்விட்டேனே என வருந்தினேன். எனது மூத்த அதிகாரியிடம் எனது ஆவலைக் கூறினேன். கேரளாவுக்கு சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபட விரும்பியதாகக் கூறினேன். அவரும் சம்மதித்தார். மேலும், நிவாரண உதவிகளில் பங்கேற்க செல்வதால் அது விடுப்பாக கருதப்படாது ஆன் ட்யூட்டியாகக் கருதப்படும் என்றார். எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அளிக்கப்பட்ட ரூ.1 கோடியை எடுத்துக்கொண்டு கேரள முதல்வரை சந்திதேன். அவரிடம் நிவாரண நிதியை வழங்கினேன். அதன் பின்னர் செங்கானூர், அரண்முலா, இடுக்கி, பராவூர் என பல்வேறு இடங்களுக்கும் சென்று என்னை நிவாரணப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டேன்.

எர்ணாகுளத்தில் அந்த மாவட்ட ஆட்சியர் என்னை அடையாளம் கண்டு கொண்டார்.

கேரள மழை வெள்ள நிவாரணப் பணிகளை ஆட்சிப் பணியில் இருக்கும் ஓர் அதிகாரியாகவும் கற்றுக்கொண்டேன். அதேவேளையில் எனது முக்கியத்துவம் எல்லாம் நிவாரணப் பணிகளில் இறங்கி வேலை செய்வதில்தான் இருந்தது.
ஒரு சாதாரண மனிதராக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அடைந்த வேதனையைப் பார்த்து நொறுங்கிப் போனேன். தாங்கள் வசித்த வீட்டில் ஒரு செங்கல்கூட இல்லாமல் போனதைப் பார்த்து உரிமையாளர்கள் கலங்கி அழுதது என்னைத் தாக்கியது.

நிவாரண முகாமில் எல்லா மாநிலங்களில் இருந்தும் தன்னார்வலர்கள் வந்திருந்தனர். அது என்னை நெகிழச் செய்தது. லடாக்கில் இருந்துகூட உதவியாளர்கள் வந்திருந்தனர். டாக்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் அதாவது எல்லைகள் கடந்த மருத்துவர்கள் என்ற பெயரில் லடாக்கில் இருந்து வந்திருந்த மருத்துவக் குழுவுக்கு நான் ட்ரான்ஸ்லேட்டராக இருந்து உதவினேன். நிவாரணப் பணிகளில் என்னை இணைத்துக் கொண்டதில் மகிழ்ச்கிறேன்" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close