[X] Close

பெண்ணைக் கடத்துகிறேன் என்ற பாஜக எம்எல்ஏ; குஷ்பு ‘ட்விட்’ போட்டு செம கலாய்!


bjp-mla-lady-kidnape

  • வி.ராம்ஜி
  • Posted: 05 Sep, 2018 19:08 pm
  • அ+ அ-

பாஜக தொண்டர்களிடம்,எந்தப் பெண் என்று என்னிடம் சொல்லுங்கள். உங்களுக்காக அந்தப் பெண்ணைக் கடத்தி வருகிறேன் என்று சொன்ன பாஜக கட்சியின் எம்எல்ஏ பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே காங்கிரஸ் கட்சியின் நடிகை குஷ்பு, இதுகுறித்து கலாய்த்து, ட்விட் தட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையில் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள காட்கோபர் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ ராம் கதம். வடமாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அப்போது, நம்மூரில் உறிஅடித்தல் என்று சொல்லப்படும் தாஹி ஹண்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சிக்குப் பின், எம்.எல்.ஏ. ராம் கதம் தனது தொண்டர்கள் மத்தியில் பேசிய பேச்சுதான் சர்ச்சையாகி இருக்கிறது.

அவர் அப்படி என்னதான் பேசினார்?

தொண்டர்களே.  நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் போனில் பேசலாம். நீங்கள் என்னிடம், நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன், அதற்கு உங்களுடைய உதவி தேவை என்று சொல்லிவிட்டால் போதும்… பிறகு நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார்.

இதுதான் இப்போது தீயாய் பற்றிக் கொண்டிருக்கிறது.

இதற்கு சமூக வலைதளங்களில் பாஜக மீதான எதிர்ப்பும் கேலியும் வலுத்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், நடிகை குஷ்பு தன் ட்விட்டர் பக்கத்தில், இதுகுறித்து பதிவிட்டு, செம கலாய் கலாய்த்திருக்கிறார்.

‘உனக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறதா? என்னிடம் சொல். நான் அந்தப் பெண்ணை கடத்தி வருகிறேன்.  – பாஜக சொல்வது ‘பெண்களை காப்பாற்றுவோம்’. செய்வது – ‘பெண்களை கடத்துவோம்!

இவ்வாறு குஷ்பு ட்விட் தட்டியுள்ளார்.

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close