[X] Close

இதய மாற்று அறுவை சிகிச்சை வலியை மறக்க ரஜினி படங்கள் பார்த்த சிறுவன்


boy-binge-watches-rajini-films-post-surgery

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 05 Sep, 2018 14:56 pm
  • அ+ அ-

பெங்களூருவைச் சேர்ந்த 13 வயது குஷால் என்கிற சிறுவன் இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்து வலியை மறக்க நடிகர் ரஜினியின் திரைப்படங்களைப் பார்த்துள்ளான்.

இதய பலவீனம் காரணமாக, மாற்று இருதயம் பொருத்த வேண்டிய கட்டாயத்தில், விசாகப்பட்டினத்திலிருந்து 20 வயது இளைஞர் ஒருவரின் இதயம் குஷாலுக்குப் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 6-ஆம் தேதி விமானம் மூலம் வந்த இதயம், அன்றே சிறுவனுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருந்த சிறுவன், தான் அங்கு இருந்த வரை, தனக்குப் பிடித்த ரஜினிகாந்தின் படங்களை அடுத்தடுத்து பார்த்து வலி மறந்து நன்றாக உடல் தேறியதாக சிறுவனுக்கு சிகிச்சை தந்த மருத்துவர் கூறியுள்ளார். 

கடந்த வருடம், ஆந்திரபிரதேசம் குண்டூரில், சிக்கலான மூளை அறுவை சிகிச்சையின் போது நோயாளி விழிப்புடன் இருக்க வேண்டியிருந்தது. அதனால் அவருக்கு பாகுபலி படத்தைப் போட்டுக் காட்டி, அவர் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்து முடித்தனர். 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close