[X] Close

விஜய், பிரபாஸிடம் கற்றுக் கொள்ளுங்கள்!- மலையாள நடிகர்களை சாடிய கேரள அமைச்சர்


learn-from-vijay-prabhas

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Sep, 2018 14:22 pm
  • அ+ அ-

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்த விஜய், பிரபாஸ், லாரன்ஸ் ஆகியோரைப் பார்த்து மலையாள நடிகர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று  கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் காடம்பள்ளி சுரேந்திரன் கூறியிருக்கிறார்.

அண்மையில் கேரள மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டது. இதில் 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. 320-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு பிரபலங்கள் பலரும் பொதுமக்கள் நிவாரண நிதியை அளித்தனர். தமிழ்த் திரையுலகிலிருந்து நடிகர் விஜய் ரூ.75 லட்ச ரூபாயும் , நடிகர் லாரண்ஸ் 1 கோடி ரூபாயும் நிதியுதவி அளித்திருக்கின்றனர். முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு முதல் தொகையாக நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி கொடுத்தார்கள். 

ஆனால், கேரளாவில் திரைத்துறையினர் குறைவான அளவிலேயே நிதியுதவி வழங்கினர்.

இது குறித்து கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் காடம்பள்ளி சுரேந்திரன், "4 கோடி ரூபாய் மதிப்பிலான கார் வைத்திருக்கும் நடிகர்கள் கூட மிகக் குறைவாகவே நிதியுதவி அளித்திருக்கிறார்கள்.  நடிகர் மோகன்லால் ரூ.25 லட்சம், மம்மூட்டி மற்றும் அவரது மகன் இணைந்து ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார்கள்.

சில நடிகர்கள் களத்தில் இறங்கி வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டதை பாராட்டியே தீரவேண்டும். இருந்தாலும் அண்டை மாநிலத்து நடிகர்கள் அளவுக்கு இவர்கள் நிதியுதவி அளிக்கவில்லையே என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.

அவர்கள் எல்லோரும் தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close