[X] Close

எகிறும் பெட்ரோல் விலை; எதற்காக எதிர்ப்பு காட்டவில்லை: யஷ்வந்த் சின்ஹா


why-are-opposition-parties-not-hitting-the-streets

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Sep, 2018 10:49 am
  • அ+ அ-

பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து கொண்டிருக்கும் சூழலில் அதை சுட்டிக் காட்டி இன்னும் ஏன் எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக எந்த போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், ஏன் எதிர்க்கட்சிகள் இன்னும் தெருவில் இறங்கி போராடமல் இருக்கின்றன. எதற்காக இன்னும் காத்திருக்கிறார்கள்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஒரு மாதமாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.82.41 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.75.39 காசுகளுக்கும் விற்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில்தான் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவிலிருந்து விலகிய தலைவருமான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close