[X] Close

ரபேல் போர் விமான ஊழலை காங்கிரஸ் கிளப்புவதற்கு காரணம் என்ன? - முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால்ரெட்டி விளக்கம்


jayabal-reddy-explains-why-congress-takes-rafal-issue

  • kamadenu
  • Posted: 04 Sep, 2018 17:58 pm
  • அ+ அ-

ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ரூ.41 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளதால், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தி வருவதாக அக்கட் சியின் செய்தி தொடர்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு நேற்று வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அமைச்சரவையில் முடிவு எடுக்காமலும், பாதுகாப்புத்துறை அமைச்சருக்குக் கூட தெரியாமலும் பிரதமர் மோடி கடந்த 10.4.2015 அன்று பிரான்ஸ் நாட்டுடன் ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்புக்கு குறைந்தபட்சம் 126 ரபேல் போர் விமானங்கள் தேவை. அதனடிப்படையில்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 126 ரபேல் போர் விமானங்களை ரூ.500 கோடியில் வாங்க பிரான்ஸுடன் ஒப்பந்தம் செய்தது. அந்த ஒப்பந்தத்தின்படி 18 விமானங்களை பிரான்ஸ் நேரிடையாக வழங்கும். மீதி 108 விமானங்கள், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய விமான நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும். அதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை பிரான்ஸ் தரும்.

நாட்டில் விமானம் உற்பத்தி செய்வதன் மூலம் கூடுதலாக 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். இந்திய விமான நிறுவனத்துக்கு தொழில்நுட்பமும் கிடைத் திருக்கும்.

ரூ.41 ஆயிரம் கோடி ஊழல்

ஆனால், பிரதமர் மோடி பிரான்ஸுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் 36 விமானங்கள் மட்டுமே கிடைக்கும். இதில் ரூ. 41 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. மோடி பிரான்ஸுடன் ஒப்பந்தம் செய்துள்ள தனியார் நிறுவனம் 28.03.2015 அன்றுதான் தொடங்கப்பட்டது. இதில் அனில் அம்பானி இடைத்தரகராகவே செயல்பட்டுள்ளார். எனவே அவரைவிட மோடியே இந்த ஒப்பந்தத்தின் மூலம் அதிக லாபம் பெற்றுள்ளார்.

இதை மிகப்பெரிய தவறாகத்தான் காங்கிரஸ் முதலில் நினைத்தது. தற்போது இது மிகப்பெரிய ஊழல் என்பது தெரியவந்துள்ளது. எனவே ரபேல் போர் விமானம் வாங்கியது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close