[X] Close

ஆட்டோ கட்டணத்தைவிட விமானக்கட்டணம் குறைவுதாங்க!- சொல்கிறார் அமைச்சர்


airfare-cheaper-than-auto-rickshaw-ride-jayant-sinha

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Sep, 2018 14:09 pm
  • அ+ அ-

விமான போக்குவரத்து இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா விமான கட்டணத்தை ஆட்டோ கட்டணத்துடன் ஒப்பிட்டு பேசியிருப்பது இணைய வெளியில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

கோரக்பூர் விமானநிலையத்தில் புதிய முனையத்தைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அமைச்சர்ம் "இன்றைய காலகட்டத்தில் ஆட்டோரிக்‌ஷா கட்டணத்தைவிட விமானக் கட்டணம் குறைவாகவே இருக்கிறது. எப்படி என்று கேட்கிறீர்களா? இரண்டு பேர் ஆட்டோவில் செல்கிறார்கள் என வைத்துக்கொள்ளுங்கள். அவர்களிடம் கி.மீட்டருக்கு ரூ.5 வீதம் வசூலிக்கப்படுகிறது. அதுவே விமானத்தில் கி.மீ. ரூ.4 தான் வசூலிக்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் ஆட்சியில் விமான போக்குவரத்து துறை மிக வேகமாக வளார்ந்துள்ளது. 2018-ல் விமானத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த 2013-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இருமடங்காக அதிகரித்துள்ளது.
2013 வரை சராசரியாக 6 கோடி பேர் விமான பயணம் மேற்கொண்டனர். ஆனால் தற்போது சுமார் 12 கோடி பேர் விமானத்தைப் பயன்படுத்துகின்றனர். முன்னர் 75 விமான நிலையங்கள்தான் இருந்தன. இப்போது 100 விமான நிலையங்கள் இருக்கின்றன.

கோரக்பூரில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, அலகாபாத் செல்ல வெகு விரைவில் இண்டிகோ ஏர்லைன்ஸ் 5 முதல் 10 விமானங்களை இயக்கும்" என்றார்.

அவரது இந்த கருத்தை நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்:

அமைச்சர் ஜெயந்த் சின்ஹா முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் மகன். இவர், அண்மையில் ஒரு சர்ச்சையில் சிக்கினார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு ராம்கர் பஜார் டண்ட் பகுதியில் ஒரு வாகனத்தில் மாட்டிறைச்சி எடுத்துச் செல்வதாக நினைத்து 30 பேர் கொண்ட கும்பல் அதைத் தடுத்து நிறுத்தியது. அந்த வாகனத்தில் இருந்த ஹசாரிபக் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அலிமுதீன் அடித்துக் கொலை செய்து வாகனத்துக்கும் தீவைத்துக் கொளுத்தியது.
இதுதொடர்பான வழக்கில் 11 பேரை குற்றவாளிகளாக அறிவித்து விரைவு நீதிமன்றம் மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. ஆனால், உயர் நீதிமன்றம் 8 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை அண்மையில் ரத்து செய்தது.

 

 

இந்த 8 பேரும் ஹசாரிபாக்கில் உள்ள மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா வீட்டிற்கு நேற்றுச் சென்றனர். அவர்களுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த ஜெயந்த் சின்ஹா, இனிப்பு வழங்கினார். பின்னர் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இது குறித்து யஷ்வந்த் சின்ஹா, "எனது மகன் ஓர் உதவாக்கரை" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close