[X] Close
 

அங்கே லட்சம் வழக்குகள் இருக்கின்றன.. அதைப் பற்றியும் கவலைப்படலாமே!- கபில் சிபல்


madras-high-court-orders-nhai-separate-toll-gates-for-vip-s

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Sep, 2018 10:06 am
  • அ+ அ-

டோல் கேட்டுகளில் நீதிபதிகள் உட்பட விஜபிக்களுக்கு தனியாக பாதை அமைக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் விமர்சித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "நீதிபதிகள் உள்ளிட்ட விஜபிக்களுக்கு சுங்கச் சாவடிகளில் தனியாக பாதை அமைக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கே லட்சக்கணக்கில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவை எல்லாம் நீதிபதிகளுக்கு கவலை அளிக்கவில்லை. சுங்கச் சாவடியில் 15 நிமிடங்கள் காத்திருப்பதே கவலை அளிக்கிறது. 

குடியாட்சியில் இவர்கள்தான் க்ரீமி லேயர் மக்களோ?" எனப் பதிவிட்டுள்ளார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close