[X] Close
 

ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #Sophia, #சோபியா, #பாசிசபாஜக_ஆட்சிஒழிக 


hashtags-trends-in-india-leval-at-twitter-for-sophia-arrest

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 04 Sep, 2018 08:47 am
  • அ+ அ-

பாஜகவை விமர்சித்ததிற்காக சோபியா கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து ட்விட்டரில் #Sophia, #சோபியா மற்றும் #பாசிசபாஜக_ஆட்சிஒழிக ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட்டாகி வருகிறது.

தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நேற்று (செப்டம்பர் 3) தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணப்பட்டார். அதே விமானத்தில் பயணம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த சோபியா என்ற பெண், பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டுள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக தமிழிசை அளித்த புகாரில் சோபியா கைது செய்யப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் சமூகவலைத்தளத்தில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

ஸ்டாலின் காட்டமான ட்வீட்:

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின், “ஜனநாயக விரோத, கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்! அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கின்றேன்! பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!” என்று காட்டமாக பதிவு செய்திருக்கிறார்.

ஸ்டாலின் ட்வீட் செய்தவுடன், உதயநிதிஸ்டாலின், அன்பில் மகேஷ், டி.ஆர்.பி ராஜா உள்ளிட்ட திமுக-வில் உள்ள அனைவருமே இது தொடர்பாக ட்வீட் செய்யத் தொடங்கினார்கள். மேலும், இணையத்திலும் சோபியா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து #Sophia, #சோபியா மற்றும் #பாசிசபாஜக_ஆட்சிஒழிக ஆகிய ஹேஷ்டேக்குகளில் தொடர்ச்சியாக ட்வீட் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள். 

இதனால் நேற்றிரவு தொடங்கி தற்போது வரை இந்தியளவில் #Sophia, #சோபியா மற்றும் #பாசிசபாஜக_ஆட்சிஒழிக  ஆகிய ஹேஷ்டேக்குகள் தொடர்ச்சியாக ட்ரெண்ட்டாகி வருகிறது. 
 

[X] Close