[X] Close

கேரள வெள்ளத்துக்கு மலையாள நடிகர்கள் குறைவான நிதியுதவி: ஷீலா சாடல்


sheela-slams-malayalam-film-artists-regarding-kerala-flood-donation

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 03 Sep, 2018 18:12 pm
  • அ+ அ-

கேரள வெள்ள நிவாரணத்துக்கு குறைவான நிதியுதவி அளித்திருக்கும் மலையாள நடிகர்களை கடுமையாக சாடியுள்ளார் ஷீலா

கேரளாவில் பெய்த கனமழையால், கடும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பல மக்கள் தங்களுடைய வீடுகள், உடைமைகளை இழந்து தவித்தனர் . அம்மாநிலமே கடும் பாதிப்புக்கு உள்ளானது. 

இதிலிருந்து மீள கேரள அரசுக்கு திரையுலகினர், தொண்டு நிறுவனங்கள், பணக்கார முதலாளிகள் உள்ளிட்ட பலரும் நிதியுதவி வழங்கி வருகிறார்கள். தமிழ் திரையுலகிலிருந்து லாரன்ஸ், விஜய் உள்ளிட்ட பல நடிகர்களும் நிதியுதவி அளித்திருக்கிறார்கள். 

ஆனால், கேரள நடிகர்கள் சில லட்சங்களே நிதியுதவி அளித்துள்ளது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக வெளிப்படையாக பேசியிருக்கிறார் பழம்பெரும் நடிகை ஷீலா.

இது தொடர்பாக ஷீலா கூறியிருப்பதாவது:

கேரள அரசு ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிக்கிறார்கள். அதே போன்று முதல்வர் நிவாரண நிதிக்கு குறைந்தது ஒரு படத்தின் சம்பளத்தையாவது நட்சத்திரங்கள் தரவேண்டும். ஒரு விளம்பரத்துக்கு 30 லட்சத்திலிருந்து 1 கோடி வரை பெறுகிறார்கள். 

3-4 கோடி மதிப்புள்ள கார்கள் வைத்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் குறைவாக நிதியளிக்கிறார்கள். அனைத்து கலைஞர்களுமே  அவர்கள் அந்தஸ்தில் உயர்ந்துள்ளார்கள். டிக்கெட் வாங்க மக்கள் அளிக்கும் பணத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். இப்போது அந்த மக்கள் கஷ்டப்படும் போது அவர்களுக்கு அதிகமாக நிதியுதவி கொடுத்து, அவர்கள் பக்கம் நிற்பது தான் நியாயம்

இவ்வாறு ஷீலா தெரிவித்திருக்கிறார்.

ஷீலாவின் இந்தப் பேச்சு, கேரள நடிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close