[X] Close

தமிழகம் மீது அன்பைப் பரப்பும் கேரள மக்கள்: வைரல் வீடியோவுக்கு பதிலடி


kerala-counters-hate-campaign

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 01 Sep, 2018 18:25 pm
  • அ+ அ-

கேரளம் தமிழகத்தை நேசிக்கிறது என்றும், வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்றும் பல கேரள பிரபலங்களும், பொதுமக்களும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

இதற்குக் காரணம், சில நாட்களாகவே, கேரளாவைச் சேர்ந்ததாக கூறப்படும் இளம் பெண் ஒருவர், தமிழக இளைஞர்களுக்கு சவால் விடுவது போன்ற ஒரு வீடியோ பகிரப்பட்டது. தொடர்ந்து தமிழக இளைஞர்கள் சிலரும், கேரள இளைஞர்கள் சிலரும் ஒருவரை ஒருவர் தவறாகப் பேசி சவால் விடும் வீடியோக்களும் பரவின.

வெறுப்பை உமிழும் இந்த வீடியோக்கள் பலரால் கண்டனங்களுடன் பகிரப்பட்டது. நிலைமை மோசமாவதை உணர்ந்த கேரள மக்கள், இந்த வீடியோவை புறக்கணித்து, இரு மாநிலங்களுக்கு இடையே அன்பை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நடிகை ரீமா கல்லிங்கல், கேரள எம்எல்ஏ விடி பல்ராம், பத்திரிகையாளர் ஷஹினா நஃபீசா, ஐடியா ஸ்டார் சிங்கர் போட்டியின் வெற்றியாளர் சாய்ரா சலீம் எனப் பலரும் ஒரு குறிப்பிட்ட பதிவை (ஆங்கிலத்தில்) பகிர்ந்தனர். 

அதில், ''சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட ஒரு வீடியோ பதிவு பரவி வருவதாகத் தெரிகிறது. அதில், கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஒருவரை ஒருவர் வசை பாடுகின்றனர். இந்த வீடியோ எங்கிருந்து உருவானது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் இதை உடனடியாக நிறுத்த வேண்டியது நம் அனைவரது கடமை. பரஸ்பர அன்பு, மரியாதை மற்றும் ஒத்துழைப்பு என கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் நடுவில் நீண்ட கால உறவு உள்ளது.

சமீபத்தில் கேரளா சகோதர சகோதரிகள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் போது தமிழக மக்கள் காட்டிய பெருந்தன்மைக்கும் இரக்கத்தக்கும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். மேலே குறிப்பிட்டுள்ள வீடியோ பதிவை பகிர்பவர்கள் இரண்டு மாநிலங்களுக்கும் நல்லது நினைக்காதவர்கள். நமது ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் உடைப்பதே அவர்கள் முயற்சியின் நோக்கம். இந்த சதியில் பங்கெடுக்காமல் இருப்போம்''. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் மீறி சிலர் வீடியோக்களை பகிர்வதை பார்த்த கேரள காவல்துறை, கீழ்கண்ட பதிவை அதன் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் எழுதியது.

"இளம் மலையாள பெண் மற்றும் தமிழ் இளைஞர்கள், தனிப்பட்ட பிரச்சினையை வைத்து பேசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த தனிப்பட்ட வீடியோக்கள் இரண்டு மாநிலங்களுக்கு இடையே இருக்கும் பிரச்சினையைப் போல சிலர் சித்தரித்து, சவால் விடும் வீடியோக்களையும் சிலர் பதிவேற்றி வருகின்றனர்" 

இவை முட்டாளதனமான வீடியோக்கள் என்றும், இது போன்ற வீடியோக்களை பகிர, பதிவேற்ற வேண்டாம் என்றும் கேரள காவல்துறை எச்சரித்துள்ளது. 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close