[X] Close

புகைப்படக் கலைஞர்களுக்கான சர்வதேச விருது: தேர்வான 4 பேரில் ஒரு இந்தியர்


lensman-chosen-for-international-award

கடிதத்துடன் தம்மா | படம்: விஜயபாஸ்கர்

  • kamadenu
  • Posted: 01 Sep, 2018 17:59 pm
  • அ+ அ-

விஜயவாடா நகரைச் சேர்ந்த தம்மா ஸ்ரீனிவாச ரெட்டி என்கிற புகைப்படக் கலைஞர், அமெரிக்காவின் இமேஜ் கொலீக் சொசைட்டி இண்டர்நேஷன்ல் (ஐசிஎஸ்) என்ற அமைப்பின் உயரிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

IUSF என்கின்ற அமைப்பு, அமெரிக்காவின் நான்கு புகைப்படக் கலை அமைப்புகளின் பிரதிநிதியாகும். தம்மா ஸ்ரீனிவாச ரெட்டிக்கு வழங்கப்பட்டவிருக்கும் இந்த விருதுக்கு சர்வதேச அளவில் இன்னும் 3 புகைப்படக் கலைஞர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நான்கில் ஒருவரான ஸ்ரீனிவாச ரெட்டிக்கு கிடைத்திருக்கும் இந்த கவுரவம், புகைப்படக் கலைஞர்களுக்கு கிடைக்கும் உச்சபட்ச அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. 

விஜயவாடா கலாச்சார மையத்துடன் சேர்ந்து திரு. ரெட்டி பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஒருங்கிணைத்தார். இதில் அமராவதியின் தலைமை செயல் அதிகாரி சிவா நாகி ரெட்டி, ஆந்த்ரா கலை அகாடமி தலைவர் நாரயண ராவ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இதில், ஐசிஎஸ் அமைப்பின் நிறுவனர் மற்றூம் தலைவரிடமிருந்து தனக்கு விருது கிடைப்பது பற்றிய கடிதம் வந்திருப்பதை தம்மா உறுதி செய்தார். 

ஒரு புகைப்படக் கலைஞனாக, பத்திரிகையாளனாக, தேசிய மற்றும் சர்வதேச அளவி, தான் பெற்றதிலேயே உயரிய விருது இது என்று தம்மா குறிப்பிட்டார். கலிபோர்னியாவில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் சர்வதேச புகைப்படக் கலை மாநாட்டில் இந்த விருது வழங்கப்படவுள்ளது. 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close