[X] Close

பெண்ணின் இருக்கைமீது சிறுநீர்: ஏர் இந்தியா சர்வதேச விமானத்தில் போதைப் பயணி அட்டகாசம்


cheap-behavior-by-a-passenger-at-air-india-flight

  • பால்நிலவன்
  • Posted: 01 Sep, 2018 15:32 pm
  • அ+ அ-

வானில் பறந்துகொண்டிருந்த ஏர் இந்தியாவின் சர்வதேச விமானத்தில் ஒரு போதை நபர் பெண் அமர்ந்திருந்த இருக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தை இதுகுறித்து அறிக்கை ஒன்றை கேட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஆகஸ்ட் 30 'ஏர் இந்திய விமானம் 102' நியூயார்க்கிலிருந்து புறப்பட்டு புதுடெல்லிக்கு வந்துகொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. இவ்விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவரின் மகள், நேற்று வெள்ளிக்கிழமை மாலை ட்விட்டரில் இச்சம்பவம் குறித்து ஒரு புகாரை பதிவு செய்துள்ளார்.

''ஆகஸ்டு 30 அன்று AI102 ஜேஎப்கே விமானம் டெல்லிக்கு வந்து கொண்டிருந்தது. அதில் என் தாயார் இருக்கை எண்.36டி பயணம் செய்துகொண்டிருந்தார். இரவு உணவு சேவைக்குப் பிறகு அவர் ஒரு உச்சபட்ச அதிர்ச்சியை சந்தித்தார். அவரது இருக்கை முழுவதும் சரிந்தது, தனது பேன்ட்டை அகற்றி என் தாயார் இருக்கையின்மீது சிறுநீர் கழித்துள்ளார். தயவுசெய்து இப்பிரச்சினையை உடனடியாக கவனிக்கவும்'' இவ்வாறு தெரிவித்ததோடு, விமான அமைச்சர் @ சுரேஷ் பிரபு, வெளியுறவுத்துறை அமைச்சர் @ சுஷ்மா சுவராஜ், @ ஏர் இந்தியா ஆகியோருக்கு இத்தகவல் பகிரப்பட்டுள்ளது.
விமானத்தில் இச்சம்பவம் நடைபெற்றபோது, ஏர் இந்தியாவிடம் புகார் தெரிவித்த பின்னரே, இருக்கையை மாற்றியுள்ளனர்.

சமூக செயற்பாட்டாளர் கவிதா கிருஷ்ணன் என்பவரின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த பாதிக்கப்பட்ட பெண் பயணியின் மகள், ''டெல்லி விமான நிலையத்தில் தொடர்புடைய இன்னொரு விமானத்திற்காக எனது தாயார், தனது சக்கர நாற்காலியில் காத்திருந்தபோது அந்தப் போதைப் பயணி நடந்து சென்றதைக் கண்டார்" என்று பதிவிட்டுள்ளார்.

இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தனது ட்விட்டர் பதிவில், ''@ஏர் இந்தியா தயவுசெய்து இச்சம்பவம் குறித்தும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான முழுவிவரத்தையும் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கும், விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்திற்கும், சிவில் விமானப் போக்குவரத்துத்துறை தலைமை இயக்குநரகத்துக்கும் உடனடியாக அனுப்பிவைக்கவும். தங்கள் தாயார் இந்த மோசமான அனுபவத்திற்கு ஆளானது மிகவும் துரதிஷ்டவசமானது.'' என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற ஒழுங்கீனமான முகம்சுளிக்கும் சம்பவங்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் விமானப் போக்குவரத்துப் பயணமே கசப்புமிக்கச ஒன்றாக மாறக்கூடும் என்று சமூகவலைதளங்களில் வருத்தம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close