[X] Close
 

வன்முறையா? அஹிம்சையா? உங்கள் நிலைப்பாடு என்ன?- சித்தார்த் கேள்வி


sidharth-on-gauri-lankesh

  • பாரதி ஆனந்த்
  • Posted: 01 Sep, 2018 15:08 pm
  • அ+ அ-

கவுரிலங்கேஷ் கொலை வழக்கில் அவரது கொலை ஓராண்டுக்கு முன்னரே திட்டமிடப்பட்டுவிட்டது என்று தகவல் நேற்று வெளியானது.

இந்நிலையில் இது குறித்து ட்வீட் செய்த நடிகர் சித்தார்த் நமது பாதை வன்முறையா? அஹிம்சையா? என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். உங்கள் நிலைப்பாடு என்ன எனக் கேட்டுள்ளார்.

"கவுரிலங்கேஷ், அவரது பார்வைக்காக, சுட்டுக் கொல்லப்பட வேண்டியவர் தான் என நம்புபவர்களும் நம் தேசத்தில் இருக்கிறார்கள். (பலர் இருக்கிறார்கள், என்னால் உறுதியாக சொல்ல முடியும்). என்னைப் பொருத்தவரை இது பெரிய பிரிவு. எல்லாமே பாஜக, காங்கிரஸ் பற்றியது அல்ல. மக்கள் ஒருவரை ஒருவர் எப்படிப் பார்க்கிறார்கள். குற்றம்சாட்டாமல் பதில் கூறுங்கள், உங்கள் நிலைப்பாடு என்ன?" என அவர் ட்வீட் செய்திருக்கிறார்.

நேற்றும் சித்தார்த் ஒரு அரசியல் சார்ந்த ட்வீட் செய்திருந்தார்.

ரபேல்ஸ் போர் விமான சர்ச்சையை சுட்டிக்காட்டி நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த கருத்தின் தரத்தைப் பாருங்கள். இந்த தேசம் இரண்டு கட்சிகளுக்கு இடையே சிக்கியுள்ளது. வேறு ஏதாவது நல்லது நடக்குமா? ஏனெனில் இத்தேசம் சிறப்பானதைப் பெற தகுதியானது" எனப் பதிவிட்டிருந்தார்.
இந்த ட்வீட்டில் காங்கிரஸ், பாஜக கட்சிகளின் பெயரை சற்றே குழப்பி எழுதி பகடி செய்திருந்தார். அதாவது ஆங்கிலத்தில் காங்கிரஸ் கட்சி Indian National Congress என்றே அறியப்படுகிறது. அதேபோல் பிஜேபி Bharathiya Janata Party என்று அறியப்படுகிறது.
இவ்விரண்டையும் குழப்பி Indian Peoples Party மற்றும்  Bharatiya Rashtriya Congress என எழுதி கிண்டல் செய்திருந்தார்.
 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close