[X] Close

சடலத்துடன் செல்ஃபி எடுத்த ஊழியர்கள்: சமூக வலைதளங்களில் குவியும் கண்டனங்கள்


hospital-workers-take-selfie-with-nandamuri-harikrishna-s-body

  • பாரதி ஆனந்த்
  • Posted: 31 Aug, 2018 21:23 pm
  • அ+ அ-

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி ராமாராவின் மகனும், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் சமீபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது சடலத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட மருத்துவமனை ஊழியர்களுக்கு சமூக வலைதளங்களில் கண்டனக் குரல் குவிந்து வருகிறது.

அந்தப் புகைப்படத்தில் ஒரு வார்டு பாயும் அவருடன் ஒரு வார்டு பெண்ணும் இரண்டு செவிலியரும் போஸ் கொடுத்திருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு கண்டனம் தெரிவித்து நெட்டிசன்கள் பதிவுகளைப் பகிர சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முடிசூடா மன்னனாக விளங்கியவரும், அம்மாநில முதல்வருமான என்.டி ராமாராவின் 4வது மகன் நந்தமுரி ஹரிகிருஷ்ணா. இவரது மகன், தெலுங்கு திரையுலகின் தற்போதைய முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆர்.

இந்தநிலையில், ஹரிகிருஷ்ணா, நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள நர்கெட்பள்ளி- அடங்கினி நெடுஞ்சாலையில் காரில் சென்றார். இன்று காலை அவரது கார் நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்ட ஹரிகிருஷ்ணா, தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close