[X] Close

அரசியலில் பாகுபலி யார் தெரியுமா?- இந்த வீடியோவைப் பாருங்க..


baahubali-of-madhya-pradesh-is

  • பாரதி ஆனந்த்
  • Posted: 31 Aug, 2018 20:44 pm
  • அ+ அ-

பாகுபலி படத்தை இவ்வளவு நேர்த்தியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவுக்கு பயன்படுத்தியிருக்கின்றனர் மத்தியப் பிரதேச பாஜகவினர்.

அம்மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காங்கிரஸும் பாஜகவும் போட்டி போட்டுக் கொண்டு கட்சியைப் பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

அந்த வரிசையில்தான் பாஜகவினர் பாகுபலியை அரசியலுக்கு இழுத்துள்ளனர். இல்லை இல்லை.. அரசியலில் ஒரு பாகுபலியாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுகானை உருவகப்படுத்தியுள்ளனர்.

2.16 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் சவுகான் மார்ஃப் செய்யப்பட்டிருக்கிறார். அவர் கிண்டலுக்கு ஆளாவப்போவதுபோல் ராகுல் காந்தி, சோனியா காந்தி, ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரும் மார்ஃப் செய்யப்பட்டுள்ளனர்.
பாகுபலியாகிய நான் என பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் காட்சியில் சிவராஜ் சவுகானாகிய நான் என சொல்வதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னும் எப்படியெல்லாம் ஸ்பூஃப் செய்திருக்கிறார்கள் என்பதை நீங்களே அந்த வீடியோவைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close