[X] Close

இந்த மாயமொழிக்காரரை என்ன செய்வது?- பிரசாந்த் பூஷண் சாடல்


what-should-we-do-with-jumlaman

  • பாரதி ஆனந்த்
  • Posted: 31 Aug, 2018 14:12 pm
  • அ+ அ-

பணமதிப்பு நீக்கத்தால் செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளில் 99.3 சதவீதம் அதாவது ரூ.15.41 லட்சம் கோடியில் ரூ.15.31 கோடி வங்கிக்குத் திரும்பிவந்துவிட்டது. ரூ.10,700 கோடி மட்டுமே வரவில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை கடுமையாக சாடியிருக்கிறார் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகளில் வெறும் 0.7% நோட்டுகள் மட்டுமே வங்கிக்கு திரும்ப வரவில்லை. இதுகூட அதை வங்கியில் செலுத்த இயலாமல் போன ஏழை, எளிய மக்களுடைய பணமாக இருக்கலாம்.

புதிய நோட்டுகள் அச்சடிக்க 11,000 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. கறுப்புப் பணம் ஏதும் மீட்கப்படவில்லை. பணமதிப்பு நீக்கத்தால் 100 பேர் பலியாகியுள்ளனர்.

லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். பொருளாதாரமே சிதைந்துவிட்டது. இத்தனைக்கும் காரணமான அந்த மாயமொழிக்காரை என்ன செய்யலாம்?" என பிரசாந்த் பூஷண் விளாசியுள்ளார்.

ஜூம்லா என்றால் போலி வாக்குறுதி என்று அர்த்தம். அண்மையில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பேசிய ராகுல் காந்தி ஜூம்லா ஸ்டிரைக் என்று பேசியிருந்தார். ராகுல் காந்தி உரை முடிந்ததும் கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையானது ஜூம்லா ஸ்டிரைக். ஜூம்லா என்றால் இந்தியிலும் உருதிலும் போலி வாக்குறுதி என்று அர்த்தமாகும்.

தற்போது, பிரசாந்த் பூஷண் பிரதமர் மோடியை Jumlaman என அழைத்துள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close