[X] Close
 

கேரளாவுக்கு வெள்ளம் போல் பெருகும் நிதியுதவி: ரூ.1000 கோடியைக் கடந்தது


cms-relief-fund-crosses-rs-1-000-crore

  • பாரதி ஆனந்த்
  • Posted: 31 Aug, 2018 09:29 am
  • அ+ அ-

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு நிதியுதவியும் வெள்ளம் போல் பெருகி வருகிறது. தாராள மனம் கொண்டவர்கள் அளித்துவரும் கொடையால் முதல்வரின் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.1027.24 கோடி நிதி சேர்ந்துள்ளது.

கேரள மழை வெள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற தொகையை அளிக்குமாறு கோரப்பட்டது.

முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்புவதற்கான வங்கிக் கணக்கு மற்றும் விவரங்களைப் பகிர்ந்திருந்தார். இது பல்வேறு ஊடகங்களிலும் அவ்வப்போது வெளியாகி வந்தது.

இந்நிலையில், ஆகஸ்ட் 30-ம் தேதி எடுக்கப்பட்ட கணக்கின்படி முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1027.24 கோடி நிதி சேர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதில் ரூ.145 கோடி தொகை வெவ்வேறு வங்கிகள் மூலம் முதல்வர் நிவாரண நிதிக்கு கிடைத்துள்ளது. பேடிஎம் வாயிலாக ரூ.45 கோடி செலுத்தப்பட்டுள்ளது. 

எஸ்பிஐ வங்கி வாயிலாகவே அதிகப்படியான மக்கள் நிதியுதவியை செலுத்தியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக 1.6 லட்சத்துக்கும் மேலான மக்கள் எச்டிஎஃப்சி வங்கி வாயிலாக நிதியுதவியை அனுப்பியுள்ளனர்.
மற்ற வங்கிகள் வாயிலாக ரூ.43.36 கோடி பணம் சேர்ந்துள்ளது. 

முதல்வரின் பேரிடர் நிவாரண நிதி CM’s Distress Relief Fund (CMDRF) என்ற பெயரில் எஸ்பிஐ வங்கியில் தொடங்கப்பட்ட கணக்கில் ரூ.610.73 கோடி செலுத்தப்பட்டுள்ளது. காசோலைகள் மற்றும் வரைவோலைகள் வாயிலாக ரூ.39.29 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31-ம் தேதி எடுக்கப்பட்ட கணக்கின்படி ஆன்லைன் வாயிலாக முதல்வரின் நிவாரண நிதிக்கு 4.17 லட்சம் மக்கள் நிதியுதவி செலுத்தியுள்ளனர்.

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதியுதவி நீளட்டும்.

வங்கிக் கணக்கு விவரம்:

Account number: 67319948232
Bank: State Bank of India
Branch: City branch, Thiruvananthapuram
IFS Code: SBIN0070028
PAN: AAAGD0584M
Name of Donee: CMDRF



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close