[X] Close
 

அதிகம் டிவி பார்ப்பது தென்னிந்தியர்கள்தான்: பார்க் ஆய்வில் தகவல்


more-south-indians-watch-tv-says-barc-survey

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 30 Aug, 2018 16:53 pm
  • அ+ அ-

பார்வையாளர்கள் ஆய்வு அமைப்பான பார்க் (BARC) எடுத்துள்ள கணக்கெடுப்பின்படி, தென்னிந்தியாவில்தான் தொலைக்காட்சி பார்வையாளர்கள் அதிகம் எனத் தெரியவந்துள்ளது. 

இந்த ஆய்வின்படி, 5 தென்னிந்திய நகரங்களில் 95 சதவித வீடுகளில் தொலைக்காட்சி பெட்டி உள்ளது. மொத்தம் 25.9 கோடி மக்கள் தொலைக்காட்சி பெட்டி வைத்துள்ளனர். இது 2016-ஆம் ஆண்டை விட 8 சதவிதம் அதிகமாகும். வட இந்தியாவில் டிவி வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 20.9 கோடி, மேற்கில் 22.1 கோடி மற்றும் கிழக்கில் 14.6 கோடி. இந்த ஆய்வு 4,300 டவுன் / கிராமங்கள், 64% நகரப் பகுதி என மொத்தம் 3 லட்சம் வீடுகளில் நடத்தப்பட்டது. 

பார்க் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பார்தோ தாஸ்குப்தா பேசுகையில், "தென்னிந்தியாவின் டிவி பார்க்கும் பழக்கம் குறித்து சுவாரசியமான தகவல்களை இந்த ஆய்வு தெரிவிக்கின்றது. இந்தியாவில் தொலைக்காட்சியின் ஊடுருவல் 66% உள்ளது. ஆனால் தென்னிந்தியாவை மட்டும் எடுத்துக்கொண்டால் இது 95% என அதிகமாக உள்ளது. தென்னிந்தியாவில் மின்சார இணைப்பு 99.9% இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மின்சாரம் இருக்கும் வீடுகளில் முதலில் வாங்கப்படும் பொருட்களில் டிவியும் ஒன்று" என்று குறிப்பிட்டார்.

பத்தில் எட்டு பேர் தினமும் 4 மணி 10 நிமிடங்கள் வரை டிவி பார்க்கின்றனர். தென்னிந்தியாவில் தொலைக்காட்சிக்கு பார்க்க செலவிடப்படும் தினசரி நேர அளவும் வருடத்துக்கு வருடம் அதிகரித்துவருகிறது. 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close