[X] Close
 

பிரதமரை கொல்ல சதி; பின்னணி இதுதான்!- சொல்கிறார் ஜிக்னேஷ் மேவானி


the-so-called-plot-to-kill-p-m-has-to-be-designed-by-pune-police

  • பாரதி ஆனந்த்
  • Posted: 30 Aug, 2018 10:29 am
  • அ+ அ-

பிரதமரை கொல்ல சதி நடப்பதாகக் கூறுவதே அனுதாப ஓட்டுக்களைப் பெறுவதற்காகவே என ஜிக்னேஷ் மேவானி விமர்சித்திருக்கிறார்.

பிரதமர் மோடியை கொலை செய்ய சதி செய்வததாக மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிய பல்வேறு மாநிலங்களிலும் ரெய்டு, கைது நடந்து வருகின்றன.

இதனடிப்படையில் குஜராத் எம்.எல்.ஏ.வும் தலித் போராளியுமான ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமரை கொல்வதற்கு சதி என்று பிரச்சாரம் செய்யப்பட்டுவரும் கருத்துக்கு பின்னணி இதுதான். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் உத்தரவுகளின்படி இந்த சதித்திட்டம் புனே காவல் நிலையத்தில்தான் ஜோடிக்கப்பட்டுள்ளது. 2019 தேர்தலில் அப்பாவி மக்களை ஏமாற்றி அனுதாப ஓட்டுகளை வாங்கத்தான் கொலை சதி என்றெல்லாம் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சமூக ஆர்வலர்களையெல்லாம் கைது செய்து ஆர்.எஸ்.எஸ்., பாஜகவை எதிர்ப்பவர்கள் மத்தியில் அச்ச உணர்வு உண்டாக்க முயற்சி நடக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

சமூக ஆர்வலர்கள் கைது..
முன்னதாக, கடந்த ஜனவரி 1-ம் தேதி புனேயின் பீமா கோரிகான் பகுதியில் நடந்த கலவரத்தில் தொடர்பு இருப்பதாகவும், மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டி சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இடதுசாரித் தலைவர்கள் எனப் பலரின் வீடுகளில் புனே போலீஸார்  திடீர் ரெய்டு நடத்தினார்கள்.

கோவா, ஹரியாணா, தெலங்கானா, மும்பை, டெல்லி என 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள  நகரங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

இதில் வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாப்பர், சமூக ஆர்வலர் வெர்நான் கோன்சால்வேஸ், அருண் பெரேரியா, கவுதம் நவ்லகா, தொழிலாளர் கூட்டமைப்பு தலைவர் சுதா பரத்வாஜ், தெலுங்கு கவிஞர் வரவரா ராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்திய அளவில் ட்விட்டரில் #MeTooUrbanNaxal என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close