[X] Close

24 மணி நேரம் கெடு விதித்த ராகுல்: ட்விட்டரில் பதிலடி கொடுத்த அமித்ஷா


why-wait-24-hours-when-you-already-have-your-jpc-jhoothi-party-congress

  • பாரதி ஆனந்த்
  • Posted: 30 Aug, 2018 09:44 am
  • அ+ அ-

ரபேல் போர் விமான விலை சர்ச்சை தொடர்பாக ட்விட்டரில் ராகுல் காந்தி மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு சவால் விடுத்திருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் அமித்ஷா.

பிரான்ஸில் இருந்து வாங்கப்படவுள்ள ரபேல் போர் விமானத்தின் விலை குறித்து மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பதற்கு அதில் ஊழல் நடந்துள்ளதே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பல விவாதங்கள் ஏற்ப்பட்டு வருகிறது. எனவே காங்கிரஸில் இருந்து உடனடி பதிலைக் கோரி, அருண் ஜேட்லி 15 கேள்விகளை முகநூலில் பதிவிட்டார்.
இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "திரு. ஜெட்லி அவர்களுக்கு மிக்க நன்றி. ரபேல் விவகாரத்தை மக்களின் கவனத்துக்கு கொண்டுவந்தற்கு. பிரச்சினைக்கு தீர்வு காண நாடாளுமன்ற கூட்டுக்குழுவை கூட்டலாமா? ஆனால் உங்களுடைய தலைவர் தனது நண்பனை பாதுகாக்க முயல்வார். இது சிரமமாக இருக்கலாம். எனவே ஆராய்ந்து யோசனை செய்து அடுத்த 24 மணிநேரங்களில் பதில் அளிக்கவும். நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்" எனப் பதிவிட்டார்.

இதற்கு பதிலளித்துள்ள அமித் ஷா, "24 மணி நேரம் ஏன் காத்திருக்க வேண்டும். உங்களிடம்தான் ஏற்கெனவே (JPC) இருக்கிறதே. JPC  என்றால் Jhoothi Party Congress (பொய் உரைக்கும் காங்கிரஸ் கட்சி) என்று அர்த்தம். தேசத்தை முட்டாளாக்க நீங்கள் சொல்லும் பொய் அம்பலமாகிவிட்டது. ரபேல் விலை என்று நீங்கள் டெல்லியில் ஒன்றும் கர்நாடகத்தில் ஒன்றும் ராய்ப்பூரில் ஒன்றும் நாடாளுமன்றத்தில் ஒரு விலையும் கூறி வருகிறீர்கள். தேசத்தின் புத்திகூர்மை உங்களுடைய புத்திக்கூர்மை அளவைவிட அதிகமாகவே இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close