[X] Close
 

ராஜபக்சேவுக்கு பாரதரத்னா விருது தரணும்! ;  - சுப்ரமணியசுவாமிக்கு அமைச்சர் கண்டனம்


rajapakse-bharadhrathna

சுப்ரமணியசுவாமி

  • வி.ராம்ஜி
  • Posted: 29 Aug, 2018 20:18 pm
  • அ+ அ-

ராஜபக்சேவுக்கு பாரதரத்னா விருதினை இந்தியா வழங்கவேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கடும்கண்டனம் அறிவித்துள்ளார்.


இதுகுறித்து அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்ததாவது:


பாஜகவில் இருக்கும் சுப்ரமணிய சுவாமி பேசுவதெல்லாம் பாஜகவின் கருத்து அல்ல என்று இப்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுவும் பாஜகவின் கருத்து அல்ல என்று சொல்வார்கள். ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டும் என்கிற சுப்ரமணிய சுவாமியின் கருத்தை, நாங்களும் அவருடைய கருத்தாகவே பார்க்கிறோம். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.


ராஜபக்சேவுக்கு பாரதரத்னா விருது வழங்கவேண்டும் என்பதை  ஏற்கவே முடியாது. எந்தச் சூழ்நிலையிலும் இந்தியாவுக்கு இப்படியொரு இழிநிலை வரவே கூடாது.


இவ்வாறு மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். 
 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close