[X] Close

ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #MeTooUrbanNaxal


metoourbannaxal-goes-viral-on-social-media

  • பாரதி ஆனந்த்
  • Posted: 29 Aug, 2018 14:56 pm
  • அ+ அ-

மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு உள்ளதாகக் குற்றம் சாட்டி, வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாப்பர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பலரை புனே போலீஸார் கைது செய்ததை எதிர்த்து ட்விட்டரில்  #MeTooUrbanNaxal என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

கடந்த ஜனவரி 1-ம் தேதி புனேயின் பீமா கோரிகான் பகுதியில் நடந்த கலவரத்தில் தொடர்பு இருப்பதாகவும், மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டி சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இடது சாரித் தலைவர்கள் எனப் பலரின் வீடுகளில் புனே போலீஸார் நேற்று திடீர் ரெய்டு நடத்தினார்கள். கோவா, ஹரியாணா, தெலங்கானா, மும்பை, டெல்லி என 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள  நகரங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

இதில் வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாப்பர், சமூக ஆர்வலர் வெர்நான் கோன்சால்வேஸ், அருண் பெரேரியா, கவுதம் நவ்லகா, தொழிலாளர் கூட்டமைப்பு தலைவர் சுதா பரத்வாஜ், தெலுங்கு கவிஞர் வரவரா ராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ராகுலின் காட்டமான ட்வீட்:
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "நாட்டில் ஒரே ஒரு தொண்டுநிறுவனம் செயல்படத்தான் அனுமதி, அது மட்டும்தான் இருக்க வேண்டும். அதுதான் ஆர்எஸ்எஸ். நாட்டில் செயல்பட்டுவரும் மற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களை எல்லாம் மூடிவிடுங்கள். அனைத்து மனித உரிமை ஆர்வலர்களையும், சமூக ஆர்வலர்களையும் சிறையில் தள்ளிவிடுங்கள். யார் மீதெல்லாம் புகார் இருக்கிறதோ அவர்களை சுட்டுக் கொல்லுங்கள். புதிய இந்தியாவை வரவேற்கிறோம்" எனக் காட்டமாக பதிவு செய்திருக்கிறார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் #MeTooUrbanNaxal என்ற ஹேஷ்டேக் கீழ் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதேபோல் #BhimaKoregaon என்ற ஹேஷ்டேகும் ட்ரெண்டாகி வருகிறது.

அதில் பலரும் மோடி அரசை எதிர்ப்பவர்கள் நக்சல் என்று அழைக்கப்பட்டால், தலித்துகளை ஆதரிப்பவர்கள் நக்சல் என்று அழைக்கப்பட்டால் நானும் நக்சலே என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close