[X] Close

ஜூனியர் என்.டி.ஆரின் தந்தை நந்தமுரி ஹரிகிருஷ்ணா காலமானார்


junior-ntr-father-passed-away-in-road-accident

நந்தமுரி ஹரிகிருஷ்ணா

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 29 Aug, 2018 08:59 am
  • அ+ அ-

முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் மகனும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா, சாலை விபத்தில் காலமானார்.

என்.டி.ராமாராவின் 4-வது மகன் நந்தமுரி ஹரிகிருஷ்ணா. இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஆந்திர அமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார். மேலும், சில படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது மகன் ஜூனியர் என்.டி.ஆர் தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். மற்றொரு மகன் கல்யாண் ராமும் நடிகராக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று (ஆகஸ்ட் 29) திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள ஹரிகிருஷ்ணா காரில் புறப்பட்டுச் சென்றார். நலகொண்டா மாவட்டத்துக்கு அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில் படுகாயம் அடைந்த ஹரிகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. 

இவரது மறைவு திரையுலகினர் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை பலரும் பதிவு செய்து வருகிறார்கள்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close