[X] Close

ஒரு மாத சம்பளத்தை நிவாரணத்துக்குத் தாருங்கள்: கேரள முதல்வரின் வித்தியாசமான கோரிக்கை


thumbs-up-for-salary-challenge

பினராயி விஜயன் | கோப்புப் படம்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 28 Aug, 2018 16:12 pm
  • அ+ அ-

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புனரமைக்க, ஒரு மாத சம்பளத்தைத் தர வேலை செய்பவர்கள் முன்வர வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் விடுத்த கோரிக்கைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

ஆளுநர், தலைமை செயலக ஊழியர்கள் எனப் பலரும் முதல்வரின் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளனர். கேரள ஆளுநர் பி. சதாசிவம், ரூ.2.50 லட்சத்துக்கான காசோலையை, தலைமை செயலாளர் டாம் ஜோஸிடம் முதல்வரின் நிவாரண நிதிக்கு தன் மீதிப் பங்காக அளித்தார். ஏற்கனவே ரூ. 1 லட்சத்தை, ஆகஸ்ட் 14-ஆம் தேதியன்று இவர் நிவாரணத்துக்குக் தந்திருந்தார்.

மேலும் கேரள அரசில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் கேரளாவை புனரமைக்க தங்கள் ஒரு மாத சம்பளத்தை விட்டுத்தரவேண்டும் என்று ஆளுநர் கோரிக்கையும் வைத்துள்ளார். ஏற்கனவே அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்கள் சம்பளத்தை நிவாரணத்துக்குத் தர முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். 

கே.கே.ஷைலஜா தலைமையில் செயல்பட்டுவரும் சமூக நீதித்துறையே முதல்வரின் கோரிக்கைக்கு முதலில் செவி மடுத்தது. தற்போது, முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், கூடுதல் தலைமை செயலர் (வருவாய்த்துறை) பி.ஹெச் குரியன், கல்வித்துறை செயலாளர் ஏ.ஷாஜஹான், காவல்துறை தலைமை அதிகார் லோக்நாத், டிஜிபிக்கள் ஏ.ஹேமச்சந்திரன் மற்றும் ரிஷி ராஜ் சிங், இன்னும் சில போலீஸ் அதிகாரிகள், முதல்வர் அலுவலக ஊழியார்கள், அமைச்சர்களுடன் பணிபுரிபவரகள்  எனப் பலரும் முதல்வரின் வேண்டுகோளை ஏற்று சம்பளத்தைத் தர முன்வந்துள்ளனர். 

தங்களால் முடிந்த அளவு தலைமை செயலக ஊழியர்களிடமிருந்து ஒரு மாத சம்பளத்தை நிவாரணத்துக்குப் பெற்றுத்தருவதாக கேரள தலைமை செயலக ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொது நிவாரண நிதியில் இதுவரை ரூ. ₹713.92 கோடி சேர்ந்துள்ளது. இதுவரை 3.91 லட்சம் மக்கள் ஆன்லைன் மூலமாக நிதி அளித்துள்ளனர். திங்கட்கிழமை அன்று மேலும் ரூ. 20 கோடி காசோலையாகவும், வரைவோலையாகவும் பெறப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close