[X] Close

வெள்ள பாதிப்பு: 5 அடி வரை சேறு படிந்திருக்கும் கேரள வீடுகள், சாலைகள்


removing-mud-a-hectic-task

ஆரன்முலா பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில்,முற்றத்தில் இருக்கும் சேற்றுப் படிமனை சுத்தம் செய்யும் முதியவர் | படம்: ஜெயகிருஷ்ணன்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 28 Aug, 2018 15:41 pm
  • அ+ அ-

தென்னக மாநிலங்களிலிருந்து எண்ணற்ற தன்னார்வலர்கள், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, பம்பா, அச்சன்கோவில், மணிமாலா உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று உதவி வருகின்றனர். முக்கியமாக, மக்களின் வீடுகளில் வெள்ள நீரில் அடித்து வந்து குவிந்திருக்கும் சேற்றை சுத்தம் செய்ய கை கொடுத்துவருகின்றனர். 

சாலைகள், வீடுகள், மற்ற கட்டிடங்கள் என வெள்ள நீர் கடந்து வந்த எல்லா இடங்களிலுமே சேறு நிறைந்துள்ளது. ஒரு அடியிலிருந்து மூன்று அடி வரை சேறு படிந்துள்ளது. இந்த அளவு சேற்றை தரையிலிருந்தும், முற்றங்களிடமிருந்தும் சுத்தம் செய்வது கடினமான காரியமாக உள்ளது. 

பம்பா நதியின் தெற்குப் பகுதியான எடயாரன்மூலாவில் வசிக்கும் விஜயன் நாயர், தன் வீட்டிலிருக்கும் சேற்றை சுத்தம் செய்ய, மூன்று பேருக்கு, நான்கு நாள் ஆனதாகத் தெரிவிக்கிறார். 

மின்சார விநியோகம் இல்லாததால், வேறு வழியின்றி, டீசல் பம்ப், ஜெனரேட்டர் உள்ளிடவைகளை வாடகைக்கு எடுத்து சுத்தம் செய்கின்றனர் இந்த கிராமத்தினர். 

இந்த வாய்ப்பை வியாபார ரீதியாக பயன்படுத்திக் கொள்ளவும் சில அமைப்புகல் தவறவில்லை. சேறு படிந்த வீடுகளை, ஜெனரேட்டர் ஹோஸ் பைப் வைத்து சுத்தம் செய்ய ரூ. 7000 முதல் ரூ. 15000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுகிறது. அரன்மூலாவில் சில நாட்களுக்கு முன்னால் மின்சார விநியோகம் மீண்டும் சீரானது. இதனால் பணம் கொடுக்க முடிந்தவர்கள் இந்த கட்டண சேவையை நாடி வருகின்றனர். 

வெள்ளம் பாதித்த அனைத்து சாலைகளிலும் சேறு நிறைந்துள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புப் படை, காவல்துறை மற்றும் வனத்துறை, நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை என பல தரப்புகளும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், சுத்தம் செய்வதற்கென தனித்தனி குழுக்களை அமைத்துள்ளனர். 

சேவா பாரதி, இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்புகளும் சுத்தம் செய்வதற்காக தன்னார்வலர்களை அனுப்பியுள்ளன. மாவட்ட நிர்வாகம், 60 சதவித அளவு தூய்மைப் பணிகள் முடிந்துள்ளன என்று கூறியுள்ளது. 

பேரிடர் மேலாண்மைப் பிரிவு, 150 பேர் கொண்ட குழுவை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்வதற்கென நியமித்துள்ளது. ஆனால் ஆரன்மூலாம், ரன்னி, கொழெஞ்சேரி, திருவல்லா தாலுக்காவில் இருக்கும் குட்டநாடு கிராமங்கள் உள்ளிட்ட இடங்களில் சுத்தம் செய்யும் பண்ணி இன்னும் ஆரம்பிக்கப்படவேயில்லை.

- ராதாகிருஷ்ணன் (தி இந்து, ஆங்கிலம்)

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close