[X] Close

கல்யாணப் பந்தலாக மாறிய ஆலப்புழா நிவாரண முகாம்


alappuzha-flood-relief-camp-turns-wedding-venue

ஆலப்புழா நிவாரண முகாமில் நடந்த திருமணம்..

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 28 Aug, 2018 13:29 pm
  • அ+ அ-

ஆலப்புழாவில் ஒரு நிவாரண முகாம் கல்யாண மண்டபமாக மாறியது. திங்கட்கிழமை அன்று, உறவினர்கள், முகாம்வாசிகள், அதிகாரிகள் முன்னிலையில், சம்பகுளம் பகுதியைச் சேர்ந்த அம்முவும், கண்ணூரைச் சேர்ந்த ரத்தீஷும் தாங்கள் தங்கியிருந்த நிவாரண முகாமிலேயே திருமணம் செய்து கொண்டனர். 

வெள்ளத்துக்கு முன், ஆகஸ்ட் 21 திருமணம் நடக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அம்முவின் வீடு வெள்ளத்தில் மூழ்கி மொத்த குடும்பமும் நிவாரண முகாமுக்கு மாற்றப்பட்டனர். 

"முதலில் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. பின் குடும்பத்தினர் ஆகஸ்ட் 27 அன்று திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். ஆனால் எங்கள் பகுதியில் வெள்ளம் சூழ்ந்திருந்ததால் அந்த தேதியில் திருமணம் நடத்துவம் சாத்தியமில்லை என்று புரிந்தது. இந்தப் பிரச்சினை பற்றி அம்முவின் தந்தை முகாம் அதிகாரிகளிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். அவர்கள் அனைத்து உதவிகளையும் செய்தனர்" என்றார் அம்முவின் உறவினர் ஒருவர். 

ஆர்யட் பஞ்சாயத்து அதிகாரிகளின் உதவியுடன் இந்தத் திருமணம் நடத்தப்பட்டது. புதுமணத் தம்பதிகளுக்கு இரண்டு சவரன் தங்கமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ ஆரிஃப் மணப்பெண்ணுக்கு திருமணப் புடவையை பரிசளித்தார். திருமணத்துக்குப் பின், முகாம் வாசிகள், அம்மு - ரத்தீஷின் உறவினர்கள் என 800 பேருக்கு உணவு பரிமாறப்பட்டது.

திருமணம் முடிந்து மாலை புதுமணத் தம்பதிகள் கண்ணூர் புறப்பட்டுச் சென்றனர். 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close