[X] Close

9 நாட்களில் 1500 எல்.ஈ.டி விளக்குகள்: வெள்ள நிவாரண முகாம்களுக்கு ஒளியேற்றிய பொறியியல் மாணவர்கள்


students-bring-light-to-relief-camps

நிவாரண முகாம்களுக்கான எல்.ஈ.டி விளக்குகள் தயாரிக்கும் மாணவர்கள்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 27 Aug, 2018 17:49 pm
  • அ+ அ-

ஓணம் கொண்டாட்டத்துக்காக நகரமே தயாராகிக் கொண்டிருந்த போது, வளர்ந்து வரும் பொறியாளர்கள் குழு ஒன்று அரசு பொறியியல் கல்லூரியில், சில கேட்ஜெட்டுகளை தீவிரமாகப் பொருத்திக்கொண்டிருந்தார்கள். வெள்ள நிவாரண முகாம்களுக்கான, நீர் புகாத எல்.ஈ.டி விளக்குகளை அவர்கள் வடிவமைத்துக் கொண்டிருந்தார்கள். 

இந்த முயற்சி மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் பிரிவு முன்னெடுத்தது. நிவாரண முகாம்களில் குறைந்த வோல்டேஜில் நல்ல வெளிச்சமான விளக்குகளை பொருத்துவதே இவர்கள் நோக்கம். நிவாரணப் பொருட்களில் விளக்குகளின் பற்றக்குறை காரணமாகவே இந்த திட்டம் ஆரம்பமானது. 

இந்த மாணவப் பிரிவின் செயலாளர் லக்‌ஷ்மி ப்ரியா பேசுகையில், "நிவாரண முகாம்களில் மெழுகுவர்த்தி, டார்ச் ஆகியவை கிடைப்பதில்லை என்பது எங்களுக்குத் தெரியவந்தது. எல்.ஈ.டி விளக்குகள் சரியாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். மற்ற கல்லூரியிலிருந்தும் மாணவர்கள் இந்த முயற்சிக்காக கை கோர்த்துள்ளனர்" என்கிறார். 

ஆகஸ்ட் 19 ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் 1000 விளக்குகள் தயாரிப்பதே இலக்காக இருந்தாலும் இதுவரை 1500 விளக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கு கல்லூரியின் ஊழியர்கள், ஆக்னேயா என்ற கலாச்சார மன்றம் ஆகியவையும் உதவியுள்ளன. விடுதி மாணவர்கள் சிலர் ஓணம் கொண்டாட தங்களின் சொந்த ஊருக்கு சென்றிருந்தாலும் மற்றவர்களும், வீட்டிலிருந்து கல்லூரிக்குச் செல்பவர்களும் இந்த திட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். 

இவர்களின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து, செங்கனூர், ஹரிபாத் ஆகிய இடங்களிலிருந்து புதிய விளக்குகளுக்கான கோரிக்கையும் வந்துள்ளது. 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close