[X] Close
 

கேரள வெள்ளம்: முகாம் விட்டு முகாம் மாறிய கதை


awaking-only-to-find-one-s-world-in-tatters

தன் குடும்பத்தினரோடு சுகேஷ்

  • kamadenu
  • Posted: 27 Aug, 2018 17:32 pm
  • அ+ அ-

சுகேஷுக்கு நினைவு திரும்பியபோது எர்ணாகுளம் அரசு மருத்துவக் கல்லூரி படுக்கையில் இருந்தார். மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரித்த போது, எலூர் அருகில் இருக்கும் நிவாரண முகாமிலிருந்து அவரைக் கொண்டு வந்ததாகக் கூறினார்கள். 

சுகேஷ், அவர் மனைவி நந்தனா, இரண்டு பெண் குழந்தைகள், சுகேஷின் பெற்றோர் என அனைவரும், எலூர் சாலையில் இருக்கும் அவர்கள் வீட்டிலிருந்து வெள்ளம் காரணமாக வெளியேறியவர்கள். ஆனால் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து, நிவாரண முகாமில், வலிப்பு வந்ததால், சுகேஷ் ஆகஸ்ட் 16 அன்று மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். 

சுகேஷ் தஞ்சம் புகுந்திருந்த பள்ளி வளாகமே மழை வெள்ளத்தால் சூழப்பட்டத்தையும், அங்கிருப்பவர்கள் வேறு முகாம்களுக்கு மாற்றப்பட்டத்தையும் குறித்து சுகேஷுக்கு தெரியாது. எடப்பாலி சுங்கச்சாவடி அருகே சுகேஷின் குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டனர். மருத்துவமனியிலிருந்து தன் மனைவியை தொலைப்பேசியில் அழித்து பேசிய பிறகே சுகேஷுக்கு சூழலின் வீரியம் புரிந்தது.  

பிறகு, தான் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் இருக்கும் நிவாரண முகாமுக்கே குடும்பத்தினரையும் சுகேஷ் வரச்சொன்னார். அவர்கள் அருகில் இருக்கலாம் என்பதால். மருத்துவக் கல்லூரி முகாம் மூடப்பட்ட பிறகு கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இருக்கும் முகாமுக்கு மாறினார்கள். அங்கு வியாழக்கிழமை வரை இருந்தார்கள். 

வியாழக்கிழமை சுகேஷ் தன் வீட்டுக்குத் திரும்பினார். வீட்டின் காம்பவுண்டில் வெள்ள நீர் வடியவில்லை. மொத்த குடும்பமும் வெள்ளி அன்று வீடு திரும்பினர். அருகிலிருக்கும் தேவாலயம் இவர்களுக்கு உணவளித்தது. 

"தண்ணீர் வீட்டின் மேல் சுவர் வரை சூழ்ந்திருந்தது. இன்னமும் வெள்ள நீரிலிருந்து ஒட்டிக்கொண்ட அழுக்கை மின்விசிறியில் பார்க்கலாம். இனி என்ன ஆகும் என்று தெரியவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் முதலிலிருந்து தொடங்க வேண்டும். வீட்டில் இருக்கும் அனைத்தும் சேதமாகிவிட்டன" என்கிறார் சுகேஷ். 

ஒப்பந்த ஊழியரான சுகேஷ், விரைவில் தனக்கு ஏதாவது வேலை கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். பிரச்சினை இருக்கும் சூழலிலும், சுகேஷும் நந்தனாவும் அவர்கள் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். 

- ஷ்யாமா ராஜகோபால் (தி இந்து, ஆங்கிலம்)



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close