[X] Close

மோடி முயற்சியால் முன்னேறியவர்; ராகுல் அப்படியல்ல: அனுபம் கேர்


anupam-kher-slams-rahul

  • பாரதி ஆனந்த்
  • Posted: 27 Aug, 2018 12:36 pm
  • அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடி தன் முயற்சியால் முன்னேறிய தலைவர் என பாலிவுட் நடிகர் அனுபம் கேர் பாராட்டியுள்ளார்.

ட்விட்டரில் அவரிடம் நெட்டிசன் ஒருவர் மோடியையும் ராகுலையும் ஒப்பிட்டு விளக்குமாறு கூற, "பிரதமர் மோடி தன் முயற்சியால் முன்னேறியவர். இந்தியாவின் வளர்ச்சிக்கு அவரிடம் தெளிவான வரைபடம் இருக்கிறது. ஆனால், ராகுல் காந்திக்கு ஆரம்பத்திலிருந்தே எல்லா சலுகைகளும் கையில் பறிமாறப்பட்டது. தலைவர் பதவியும்கூட. அதனால், அவருக்கு இந்தியாவின் எதிர்காலம் குறித்து எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லை" என ட்வீட் செய்திருக்கிறார்.

ராகுல் காந்தி சமீப காலமாக, ஜெர்மணி, லண்டன் என வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார். வெளிநாடுகளில் அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பற்றி பேசியதும், உள்நாட்டு விவகாரங்கள் பற்றி பேசியதும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில், ராகுல் குறித்து மீண்டும் நெட்டிசன்கள் அதிகளவில் பேசி வருகின்றனர். இந்த சூழலில்தான் இந்த ட்வீட்டை அனுபம் கேர் பதிவு செய்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close