[X] Close
 

அமைச்சரைத் திட்டிய நிர்மலா சீதாராமன்: கர்நாடகத் துணை முதல்வர் கடும் சாடல்


karnataka-deputy-cm-criticizes-nirmala-seetharaman

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 26 Aug, 2018 16:58 pm
  • அ+ அ-

அமைச்சரைத் திட்டிய மத்தியப் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாரமானை, தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாகச் சாடியுள்ளார் கர்நாடக துணை முதல்வர்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், குடகு வெள்ள நிலைமைகளைப் பார்வையிட்டார். அப்போது வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களையும், செய்தியாளர்களையும் சந்தித்துப் பேசினார்.

அப்போது கர்நாடக அமைச்சர் மகேஷ் இடைமறித்து, “நமக்கு நேரமில்லை, நாம் உடனே அதிகாரிகளைச் சந்திக்க வேண்டும் எனவே இந்தச் சந்திப்பு போதும்” என்று பேசியது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன், மகேஷ் மீது கடும் விமர்சனம் வைத்தார். இந்தச் சர்ச்சை கேமராவிலும் பதிவாகி வருகிறது என்று கூறியும் நிர்மலா சீதாராமன் “பதிவாகிவிட்டுப் போகட்டும்” என்று பதிலளித்துள்ளார். இந்த வீடியோ பதிவு சமூகவலைத்தளத்தில் வெளியாகிப் பலரும் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா, நிர்மலா சீதாராமனை கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

என்னுடைய அமைச்சரவை சகாவை நீங்கள் திட்டியது ஏமாற்றமளிக்கிறது. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து எங்கள் அமைச்சர்கள் குடகுவில் வெள்ள நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றனர். உங்கள் பக்க உதவிக்காக நாங்கள் எவ்வளவு மரியாதை கொடுக்கிறோமோ அதே மரியாதையை நீங்களும் அளிக்க வேண்டும்.

மாநில அரசுகள் தங்களுக்கான அதிகாரங்களை அரசியல் சாசனம் மூலம்தான் பெறுகிறது. மத்திய அரசின் மூலம் அல்ல. அரசியல் சாசனம்தான் அதிகாரங்களை மாநில, மத்திய அரசுகளுக்கு வழங்கியுள்ளது. அதாவது ஒரு சமத்துவமான கூட்டணி அமைய வேண்டும் என்பதற்காகவே அரசியல் சாசனம் அவ்வாறு எழுதப்பட்டுள்ளது. நாங்கள் மத்திய அரசை விடக் குறைந்தவர்கள் அல்ல, நாங்கள் கூட்டாளிகளே!

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close