[X] Close

நாகரிக மங்கை: சிபிஎஸ்இ புத்தக விளக்கமும் சர்ச்சையும்


schools-object-to-portrayal-of-modern-girl

  • பாரதி ஆனந்த்
  • Posted: 25 Aug, 2018 14:31 pm
  • அ+ அ-

நாகரிக மங்கை என்பதற்கு சிபிஎஸ்இ பள்ளி புத்தகமொன்றில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகள் சில தனியார் வெளியீட்டாளர்களிடமிருந்து பள்ளிப் பாட புத்தகங்களை வாங்குகின்றனர்.

அப்படி பெங்களூருவில் இயங்கும் பள்ளி ஒன்று வாங்கிய புத்தகத்தில் ஒரு பாடத்தில் நாகரிக மங்கை குறித்த விளக்கம் இடம்பெற்றுள்ளது. அந்த விளக்கத்தில், "நாகரிக மங்கை சுயநலம் மிகுந்தவர். அவர் அன்பான மகளோ அக்கறையான சகோதரியோ அல்ல. நாகரிக மங்கைக்கு ஜீன்ஸ் டிஷர்ட் அணியப் பிடிக்கும். அவரது வாழ்வில் வண்ண வண்ண சேலைகளுக்கு இடமில்லை. நாகரிக மங்கை வாழ்க்கையை முழுமையாக வாழ விரும்புகிறாள். அதனால் எந்த ஒரு பார்ட்டி கொண்டாட்டத்தையும் விட்டுவைப்பதில்லை. சினிமா, இசை நிகழ்ச்சி, பேஷன் ஷோக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை. ஆண்களுடன் நட்பு பாராட்டவே விரும்புகிறாள்" என விளக்கப்பட்டுள்ளது.

பூராபாய் சக்ரபர்த்தி என்பவர் எழுதிய ‘Current School Essays and Letters’ என்ற புத்தகத்தில்தான் இப்படி எழுதப்பட்டுள்ளது.

இந்த புத்தக சர்ச்சை வெளியான நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகள் என்சிஇஆர்டி புத்தகங்களையே பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. இது  தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கையில், "எந்த ஒரு வகுப்பு, சமூகம், பாலினம், மத சார்ந்தவரின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் கருத்துகள் இடம்பெறாமல் இருப்பதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close