[X] Close
 

4 ஃபோட்டோ; 4 பாவனை: ராகுல் படத்தை ரீ-ட்வீட் செய்த பாஜக


bjp-retweets-rahul-gandhis-photo

  • பாரதி ஆனந்த்
  • Posted: 25 Aug, 2018 11:18 am
  • அ+ அ-

ஜெர்மனியில் ராகுல் காந்தி எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் இணையத்தில் இன்றைய சென்சேஷன்.

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள, 'பசிரியஸ் சம்மர் ஸ்கூல்' நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜெர்மனி நாடாளுமன்றத்தைச் சுற்றிப் பார்த்தார். அங்குள்ள எம்.பி.க்கள் ஆவணக் காப்பகத்தையும் பார்வையிட்டார். அப்போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் வெளியிட்டது. அதில், 4 விதமான முகபாவனைகளில் ராகுல் காந்தியின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

அந்த 4 படங்களும் ராகுல் காந்தி நேராகப் பார்க்காமல், வேறு வேறு திசைகளில் பார்ப்பது போல் உள்ளது.  இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின. புகைப்படத்தை மீண்டும் வெளியிட்டு கிண்டல் செய்யும் விதத்தில் பலர் கருத்துகள் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தை விட்டுவிட பாஜக.வாலும் முடியவில்லை. ராகுல் புகைப்படத்தை 'ரீ-ட்விட்' செய்துவிட்டது. அதையும் பலர் 'லைக்' செய்துள்ளனர்.

மன்னிப்பு கோரும் பாஜக..
ஒருபுறம் ராகுல் பேச்சுக்கு மன்னிப்பு கோரும் பாஜக மற்றொருபுறம் ட்விட்டரில் ராகுல் படத்தைப் பகிர்ந்து அவரை கேலி செய்துள்ளது. ஜெர்மனியில் ராகுல் பேசும்போது, "ஒரு நாட்டின் வளர்ச்சியில் எல்லோருக்கும் சம வாய்ப்பு அைளிக்கப்பட வேண்டும். ஆனால் தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினருக்கு, மேல்தட்டு மக்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் தடுக்கப்படுகின்றன. அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. வேலை வாய்ப்பு உட்பட பல அம்சங்களில் வாய்ப்புகள் மறுக்கப்படுவது, உலகில் தீவிரவாத குழுக்கள் உருவாக காரணமாகி விடுகிறது" என்று கூறினார். அதற்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை உதாரணமாகக் குறிப்பிட்டார்.

"ஜெர்மனியில் பேசும்போது பொய் தகவல்களைக் கூறியதன் மூலம், இந்தியாவை ராகுல் காந்தி சிறுமைப்படுத்தி விட்டார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக வலியுறுத்தி உள்ளது.

[X] Close