[X] Close
 

நான் ஒரு மத்திய அமைச்சர்: ஆட்சியரிடம் மைக்கில் கெத்துகாட்டிய நிர்மலா சீதாராமன்


nirmala-seetharaman-looses-patience

  • பாரதி ஆனந்த்
  • Posted: 25 Aug, 2018 10:48 am
  • அ+ அ-

கர்நாடகா மாநிலம் குடகில் வெள்ள நிவாரண மீட்புப் பணிகள் தொடர்பான கலந்தாலோசனைக்கு சென்ற பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகாரியையும், எம்.பி.யையும் கடிந்து கொண்டவிதம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாதுகாப்பு அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் தனது அதிகார தொணி பேச்சால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் துப்பாக்கி சூடு குறித்து மீனவர்கள் மத்தியில் பேசும்போது "உங்களுக்காகத்தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.. நீங்கள் வேண்டும் என்றால் இங்கே வந்து பேசுங்கள்" என்று கோபத்துடன் பேசியது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது. தற்போது மீண்டும் அப்படியொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

குடகில் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன், "நான் இன்று முழுவதும் என்ன பணிகள் செய்ய வேண்டும் என்று மினிட் டூ மினிட் பட்டியல் தயார் செய்யப்பட்டிருக்கிறதா? அதில் முதல் நிகழ்வில்தான் இப்போது கலந்துகொண்டோமா? நன்றாக இருக்கிறது... ஒரு மத்திய அமைச்சர் மாநிலத்தில் உள்ள பொறுப்பு அமைச்சரின் சொல்படி நடக்க வேண்டுமா?" எனக் கடிந்து கொண்டார்.

அப்போது அருகிலிருந்த அமைச்சரும் அதிகாரியும் நிர்மலா சீதாராமனை சமாதானப்படுத்த முயல்கிறார்கள். ஆனால், அவர் அவரது கெத்திலிருந்து சிறிதும் தளராமல் கடுமை காட்டுகிறார்.

"மினிட் டூ மினிட் லிஸ்ட் தயார் செய்திருக்கிறீர்கள் அல்லவா அதன்படியே நான் இயங்குகிறேன். உங்களுக்கு உங்கள் அதிகாரிகள் முக்கியம் என்றால் எனக்கு எனது வேலை முக்கியம்" என்றார்.

அவரிடம் குடகு ஆட்சியர் ஸ்ரீதேவி சமாதான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், நிர்மலா சீதாராமன் சற்றும் சாந்தமடைவதாக இல்லை. அப்போது பின்னால் இருந்து யாரோ மைக் ஆனாகி இருக்கிறது என்று கூற இருந்தால் இருக்கட்டும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.

(அருகில் ஆட்சியர் ஸ்ரீதேவி)

இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

காலையிலேயே டென்சன் ஆன அமைச்சர்:

காலையில் முதலில் மாதபுரா என்ற இடத்தில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்றிருக்கிறார் நிர்மலா சீதாராமன். அங்கு இரண்டு மூன்று பேரிடம் மட்டும் குறைகளைக் கேட்டு அவர் திரும்ப முயன்றபோது மக்கள் நிர்மலாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியிருக்கின்றனர். இதனால் நிர்மலா ஆவேசமடைந்திருக்கிறார்.

பின்னர் மடிகேரிக்கு சென்றார். அங்கும் கசப்பான அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. அங்கு மக்கள் முந்தியடித்துக் கொண்டு ஓட போலீஸார் லேசான தடியடி நடத்தியிருக்கின்றனர். இது நிர்மலாவை அப்செட் ஆக்கியுள்ளது.

இந்த இரண்டு நிகழ்வுகளுக்குப் பின்னர்தான் அவர் பிரெஸ் மீட்டில் கலந்து கொண்டார். அங்குதான் ஆட்சியர் ஸ்ரீதேவியிடம் அவர் கடுமையாகப் பேசினார். 

முதல்வர் குமாரசாமியும் குடகைப் பார்வையிட வந்திருந்ததாலேயே ஆட்சியர் நிர்மலா சீதாராமனுக்கு மினிட் டூ மினிட் ஸ்கெட்யூல் தயார் செய்ததாகக் கூறப்படுகிறது.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close