[X] Close

மீட்பு நிவாரணப் பணிகள்: கேரளப் போலீஸுக்கு மோகன்லால் சல்யூட்


mohanlal-salutes-kerala-police

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 Aug, 2018 18:32 pm
  • அ+ அ-

கேரளாவில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவரும் போலீஸாருக்கு நடிகர் மோகன்லால் சல்யூட் தெரிவித்திருக்கிறார்.

வரலாறு காணாத மழை காரணமாக கேரளாவில் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாகின. 300-க்கும் மேற்பட்ட பேர் பலியாகினர்.

இந்நிலையில் கேரள மாநில கொச்சி சரக டிஜிபி விஜய் சங்கர் ஐபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஓனம் பண்டிகையை முன்னிட்டு பழுதடைந்த சாலைகளை சீரமைப்பது துண்டிக்கப்பட்ட தொலைதொடர்பு இணைப்புகளை சீரமைப்பது போன்ற பணிகளை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்" என ட்வீட் செய்து அதில் பிரதமர் மோடி, கேரள முதல்வர் பினராயி விஜயன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத், கேரள நடிகர் மோகன்லால் ஆகியோரை டேக் செய்து ட்வீட் செய்துள்ளார்.

இதற்கு மோகன்லால் சல்யூட் என்று பதிலளித்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close