[X] Close
 

நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தைக் கொடுத்த கான்ஸ்டபிள்


constable-donated-his-one-month-salary-for-kerala-government

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 Aug, 2018 11:54 am
  • அ+ அ-

கேரள மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரபலங்கள் பலரும் தங்கள் நிவாரண நிதியைக் கொடுத்து வருகின்றனர். சாமான்யர்களும் சற்றும் சளைத்தவர்கள் இல்லை. விழுப்புரம் அருகே ஒரு சிறுமி தனது பிக்கி பேங்க் சேமிப்பை வெள்ள நிவாரண நிதிக்காக கொடுத்தார். 

அந்த வரிசையில் ஆந்திர மாநிலத்தின் சார்மினார் பகுதியைச் சேர்ந்த காவலர் ஒருவர் தனது ஒருமாத ஊதியத்தை நிவாரண நிதிக்காக அளித்திருக்கிறார். 

மழை வெள்ள நிவாரண நிதிக்கு பிரபலங்கள் என்ன கொடுக்கின்றனர் எவ்வளவு கொடுக்கின்றனர் என்பதைப் பார்த்தும் விமர்சித்துக்கும் இருப்பவர்கள் மத்தியில் துடி.ராஜூ போன்ற கான்ஸ்டபிள்கள்தான் உண்மையான மழை முகங்கள். இவர் தனது ஊதியம் ரூ.68,000-த்தை நிவாரண நிதிக்காக கொடுத்துள்ளார். மாநில எல்லை கடந்து இன்னமும் உதவிகள் நீண்டு கொண்டுதான் இருக்கின்றன.

ஒரு கான்ஸ்டபிளின் ஊதியம் ரூ.68,000-மா? என்று சந்தேகம் எழுப்பியவர்களுக்கு சார்மினார் காவல் நிலைய எஸ்.ஹெச்.ஓ, "துடி ராஜூ 30 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளதால் அவரது ஊதியம் அதிகமாக இருக்கிறது" என விளக்கமும் அளித்திருக்கிறார்.

நினைவுகூரத்தக்க ட்வீட்:
இந்த வேளையில் தமிழ்ப்பட இயக்குநர் சி.எஸ்.அமுதன் பதிவு செய்திருந்த ட்வீட் குறிப்பிடத்தக்கது.  சி.எஸ்.அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில், "எந்த நடிகர் எவ்வளவு நிதியுதவி அளித்திருக்கிறார் என்ற மடத்தனமான ஒப்பீட்டை நாம் நிறுத்துவோமாக. ஒப்பீடு செய்து அவர்களை ஏன் கீழிறக்க வேண்டும். நிறைய பேர் எதுவுமே அறிவிக்காமலேயே உதவி செய்கின்றனர். நாம் சும்மா உட்கார்ந்து கொண்டு நாட்டாமை செய்யாமல் இருப்போம். ஒவ்வொரு துளியும் முக்கியமானது. எனவே நிதியுதவி செய்யுங்கள்" எனப் பதிவிட்டிருந்தார்.

[X] Close