[X] Close

வாஜ்பாயை வைத்து தேர்தல் அரசியல் செய்கிறது பாஜக!- சாடும் உறவினர்


bjp-selfishly-politicising-atal-bihari-vajpayee-s-name-for-electoral-gains-in-2019-polls-says-his-niece

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 Aug, 2018 11:17 am
  • அ+ அ-

மறைந்த முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாயி பெயரை வைத்து பாஜக 2019 மக்களவை தேர்தலுக்காக அரசியல் செய்வதாக வாஜ்பாயின் மருமகள் கருண் சுக்லா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தனியார் அங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், "பாஜக சுயலாபத்துக்காக சுயநலமாக செயல்படுகிறது. வாஜ்பாயி பெயரைப் பயன்படுத்தி 2019 மக்களவை தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. வாஜ்பாயின் மறைவை வைத்து அரசியல் செய்வதில் பாஜக கொஞ்சமும்கூட வெட்கப்படவில்லை. ஆனால் வாக்காளர்கள் இந்த போலித்தனத்தைப் புரிந்து கொள்வார்கள்" எனக் கூறியுள்ளார்.

அடல் கலச யாத்திரா என்ற பெயரில் வாஜ்பாயின் அஸ்தியை நாடுமுழுவதும் உள்ள புன்னிய நதிகளிலும் சமுத்திரங்களிலும் கரைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

சீட் மறுக்கப்பட்டவர்..
வாஜ்பாயின் மருமகளான இவருக்கு 2014 மக்களவை தேர்தலில் பாஜக சீட் வழங்க மறுத்துவிட்டது. பின்னர் அவர் கட்சியிலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில்தான் கருண், பாஜக மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது.

வாஜ்பாய் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடியை உறவினரான கருணிடம் தராமல் டெல்லி பாஜக தலைவரிடம் பிரதமரும் அமித் ஷாவும் அளித்தனர்.

இதுவும் கருணை அதிருப்தியடைச் செய்தது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close