[X] Close
 

வைரலான பாட்டி - பேத்தி புகைப்படம்: பின்னணி என்ன?


the-real-reason-behind-the-viral-picture

  • பாரதி ஆனந்த்
  • Posted: 23 Aug, 2018 16:45 pm
  • அ+ அ-

இணையத்தில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வைரலாகும். 2 வயது குழந்தைக்கு ரத்தம் தேவை என்று தொடர்பு எண்ணுடன் உலா வரும் தகவலைப் பார்த்து நாம் சம்பந்தப்பட்ட எண்ணுக்கு போன் செய்தால் அது அதர பழைய தகவலாக இருக்கும்.

அப்படித்தான், அண்மையில் வைரலான புகைப்படம் 11 ஆண்டுகள் பழமையானது என்பது தெரியவந்துள்ளது.

பள்ளி சுற்றுலா சென்ற மாணவி முதியோர் இல்லத்தில் தனது பாட்டியைக் கண்டு கண்ணீர் சிந்தியதாக அந்தப் புகைப்படத்துடன் எழுதப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ர்விவால், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் பகிர்ந்திருந்தனர். குடும்பங்கள், முதியோர் இல்லம், உறவு சிக்கல்கள் என விவாதங்கள் எல்லாம் களைகட்டத் தொடங்கின.

அப்போதுதான் நெட்டிசன்களுக்கு குட்டு வைப்பதுபோல்.. பொங்க வேண்டாம் இது 11 வருடத்துக்கு முந்தைய படம் என்ற தகவல் வெளியானது. அண்மையில் வந்துசென்ற சர்வதேச புகைப்பட தினத்தை ஒட்டி சமூகவலைதளத்தில் பகிரப்பட்டதால் இப்புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டதுபோல் வைரலாகியிருக்கிறது.

பின்னணி என்ன?
11 ஆண்டுகளுக்கு முன்னர் அகமதாபாத் நகரின் கோடாசர் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் 2007ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது உறுதியானது. இதுகுறித்து சர்வதேச ஊடகம் ஒன்று மேற்கொண்ட முயற்சியில் புகைப்படத்திலிருந்த பாட்டி தமயந்தியும், பேத்தி தேஜஸ் பக்தியும் பேட்டி கொடுத்துள்ளனர்.

பாட்டி தமயந்தி தனது சொந்த விருப்பதிலேயே அந்த முதியோர் இல்லத்தில் இருப்பதாக பேட்டியில் தெரிவித்திருக்கிறார். பேத்தியும் அதையே கூறுகிறார். பாட்டி அடிக்கடி தனது வீட்டுக்கு வந்து செல்வதாகவும் இந்த புகைப்படம் வைரலான நாள் முதல் தனது பெற்றோரை பலரும் சாடுவது வருத்தமளிப்பதாகவும் கூறியுள்ளார்.

அந்தப் புகைப்படத்தை எடுத்த புகைப்பட கலைஞர் கல்பித், இது எதிர்பாராத நெகிழ்ச்சி எனக் கூறியுள்ளார். புகைப்படம் எடுக்கப்பட்ட நாளையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். 2007 செப்டம்பர் 11-ம் தேதி புகைப்படத்தை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். அந்த புகைப்படம் அடுத்த நாள் காலையில் வெளியான 'திவ்ய பாஸ்கர்' என்ற பத்திரிகையின் முதல் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

பள்ளிச் சுற்றுலா புகைப்படம் எடுக்கச் சென்றபோது கிடைத்த எதிர்பாராத நெகிழ்ச்சி சம்பவத்தை எனது கேமராவில் பதிவு செய்தேன். அது இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் எனக்கு புகழை தேடித் தந்துள்ளது என்று கல்பித் நெகிழ்ந்தார். இது சமூக வலைதளங்களால்தான் சாத்தியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close