[X] Close

சேவை செய்யும்போது மரணித்தால் மகிழ்ச்சியே: கேரள வெள்ளத்தில் உதவும் பெண்கள் அமைப்பு


how-a-group-of-kochi-women-risked-their-lives-to-help-during-the-kerala-floods

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 23 Aug, 2018 13:28 pm
  • அ+ அ-

கேரளத்தில் ஒரு பெண்கள் குழு, உயிரைப் பணயம் வைத்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றனர். மற்றவர்களுக்கு உதவு (Do For Others) என்ற இந்த அமைப்பின் தலைவர் கொச்சியைச் சேர்ந்த பெண் தொழிலதிபரான பிந்து சத்யஜித். 

களத்தில் இறங்கி நிஜமாக வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தவர், கேரள வெள்ளத்தின் போது மீட்பு, நிவாரணப் பணி என நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். இன்று, அவரது Do For Others (DFO) அமைப்பில் 300க்கும் அதிகமானவர்கள் களத்தில் வேலை செய்கின்றனர். இன்னும் சிலர் மற்ற நாடுகளிலிருந்து, தொழில்நுட்ப ரீதியிலான ஆதரவைத் தருகின்றனர்.

பெண்கள் மட்டும் இருக்கும் குழுவாகத்தான் இதை ஆரம்பித்தோம் என்கிறார் பிந்து. ஆரம்பத்தில், பிந்துவின் தோழிகள் ஆஷா, சுஜாதா, கார்த்திகா ஆகியோர் அவருடன் இணைந்தனர். விரைவில் இவர்கள் ஆரம்பித்த வேலைகள் பெரிதாகின. சென்னை மற்றும் பெங்களூருவிலிருந்து பலர் இந்தக் குழுவில் இணைந்தனர். 

இந்த அமைப்பின் குறிப்பிடத்தக்க முயற்சிகளில் ஒன்று, குட்டநாடு பகுதியில், 72 மணி நேரத்தில் 72 பயோ டாய்லெட்டுகளை கட்டியதுதான். கொச்சி, எர்ணாகுளம், ஆலப்புழா, மூணார், திருச்சூர் என கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இந்தக் குழுவினர் சேவை செய்து கொண்டிருக்கின்றனர்.

கடலோர காவல்படை மட்டும் கடற்படையுடன் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேர்கொண்டு வரும் இவர்கள், வெள்ளத்தில் தத்தளித்த பலரை ஹெலிகாப்டர் மூலம் கயிறு கட்டி தூக்கி மீட்டுள்ளனர். அப்படி இவர்கள் ஹெலிகாப்டரில் மீட்ட கர்ப்பிணி ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அடுத்த 2 மணிநேரத்தில் நல்ல முறையில் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். 

வயநாடில் 50, குட்டநாடில் 50 என இதுவரை 100 குடும்பங்களுக்கு இந்தக் குழு நிவாரணம் அளித்துள்ளது. பெரிய கார்ப்பரெட் கம்பனிகள் முன்வந்து இன்னும் பல கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் என்பதே இந்தக் குழுவின் எண்ணம். 

பிந்து பேசுகையில், "இப்போதைக்கு மைசூர், சென்னை மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவக் குழுக்கள் எங்களுடன் இணைந்துள்ளனர். பல இடங்களில் மருத்துவ முகாம்களை அமைத்துள்ளனர். அடுத்து எங்கள் நோக்கம் மறுவாழ்வு. வயநாடு மற்றும் குட்டநாடில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அதிக உதவிகள் தேவைப்படும் பழங்குடி கிராமங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அவர்கள் வீடு உட்பட அனைத்தும் வெள்ளத்தில் அழிந்துவிட்டன. அவர்கள் அனைத்தையும் இழந்துள்ளனர். 

எனது குடும்பத்தினர் என்னைப் பற்றி கவலைப்படுகின்றனர். ஆனால் இந்தச் சேவையை செய்வதில் அற்புதமாக உணர்கிறேன். எப்படியோ நாங்கள் ஓவ்வொரு இடத்துக்கும் சென்று விடுகிறோம். ஆலுவா நதியை நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் வெள்ள நீர் சூழ்வதற்கு முன்பு சரியான நேரத்தில் அதைக் கடந்து சென்றோம். வயநாடிலும் பல விபத்துகளிலிருந்து தப்பிப் பிழைத்தோம். ஆனால் எங்கள் அமைப்பில் இருக்கும் அனைவருக்குமே இந்த சேவை செய்யும்போது மரணித்தால் மகிழ்ச்சியே" என்கிறார்.

DFO அமைப்பு நிவாரணப் பொருட்களை சேகரித்து வருகிறது. நீங்களும் அவர்களுக்கு உதவலாம்

தேவைப்படும் பொருட்கள்

மடிக்கக்கூடிய மெத்தைகள்,
படுக்கைகள், 
தலையணைகள், 
போர்வைகள்,
கெரோசின் அடுப்புகள்,
சட்டை, பேண்டுகள்
புடவை, பாவாடைகள்
அரிசி
மளிகை சாமான் சேர்த்து வைக்க டப்பாக்கள்

மேலும் தகவ்லகளுக்கு 9946699000, 9946904268 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பொருட்களை சேர்க்க வேண்டிய சென்னை முகவரிகள்

1 - Naturals Lounge, 27, South Boag Road, T Nagar
2 - A26, Sunnyvale Apartments, A block, 2nd Floor, 351 Konnur High Road, Ayanavaram
3 - Bamboola, 73, Venkata Krishna Road, RA Puram (Inside Shankar Nethralaya Eye Hospital’s compound)

- அகிலா கண்ணதாசன், தி இந்து (ஆங்கிலம்)

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close