[X] Close

வெற்றியை அர்ப்பணித்த கோலி; நன்றி தெரிவித்த கேரள முதல்வர்


m-pinarayi-vijayan-expressed-the-gratitude-of-kerala-to-team-india

  • பாரதி ஆனந்த்
  • Posted: 23 Aug, 2018 09:27 am
  • அ+ அ-

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் போட்டி வெற்றியை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு சமர்ப்பித்த இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் இந்திய அணி வீரர்களுக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 324 உயிர்கள் பலியாகின. 80 அணைகள் திறக்கப்பட்டுள்ளனர். 223139 மக்கள் 1500 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் போட்டி வெற்றியை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு இந்திய அணி அர்ப்பணித்துள்ளது. 

இது குறித்து கோலி, "நாங்கள் ஓர் அணியாக இந்த வெற்றியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம். அந்த மக்கள் பெரிய துயரத்துக்கு ஆளாகியுள்ள நிலையில், எங்களால் முடிந்தது வெற்றியை அவர்களுக்கு அர்ப்பணிப்பதே" எனக் கூறியிருந்தார்.

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், "ட்ரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் போட்டி வெற்றியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு அர்ப்பணித்துள்ள இந்திய அணியினருக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் கேரளா நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close