[X] Close
 

கேரள வெள்ளம்: காப்பீடு கோரிக்கை ரூ.1000 கோடியைத் தாண்டுமா?


kerala-floods-insurance-claims-likely-to-be-upwards-of-1-000-cr

  • kamadenu
  • Posted: 22 Aug, 2018 17:00 pm
  • அ+ அ-

கேரள வெள்ளத்தை கடுமையான இயற்கைப் பேரழிவாக கேரள அரசு அறிவித்துள்ள நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு காப்பீடுக்காக கோரப்படும் தொகை ரூ.1000 கோடியைத் தாண்டும் என காப்பீடு நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. 

கேரளாவில் வெள்ளம் வடிந்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வர, காப்பீடுக்கான ஆய்வு நடைபெறும். அடுத்த 4-5 நாட்களில் காப்பீடு கோரிக்கை விண்ணப்பம் பெறும்போது மேலும் தெளிவு கிடைக்கும் என மூத்த காப்பீடு அதிகாரி ஒருவர் கூறினார். 

ஏற்பட்ட பாதிப்பின் அளவை வைத்து பார்க்கும்போது, முதல்கட்ட ஆய்வில், கார், வீடு மற்றும் தொழில்துறை ஆகியவற்றுக்கான கோரிக்கை ரூ. 1000 கோடியைத் தாண்டும் எனத் தெரிகிறது. திங்கட்கிழமை, நிவாரணப் பொருட்களுக்கு சுங்க வரி மற்றும் மாநில வரியிலிருந்து கேரள அரசு விலக்கு அளித்தது. 

ஓரியண்டல் காப்பீடு நிறுவனத்தின் தலைவர் கிரிஜாகுமார் பேசுகையில், "எதிர்பார்க்கப்படும் காப்பீடு தொகை கோரிக்கையை இப்போதே மதிப்பீடுவது சரியாக இருக்காது. முக்கிய பொதுத்துறை காப்பீடு நிறுவனங்கள் காப்பீடு தொகையை தருவதற்காக ஆயத்தமாகியுள்ளன. இந்த நிறுவனங்கள் எளிமையான நடைமுறையில் காப்பீடு தொகையை கோர வழிவகை செய்துள்ளன" எனத் தெரிவித்தார். 

ஒரு பேரிடர் கடுமையான தன்மையுடயது என்று அறிவிக்கப்படும்போது, அந்த மாநிலத்துக்கு தேசிய அளவில் ஆதரவு அளிக்கப்படும். தேசியப் பேரிடர் நிவாரண நிதி மூலம் கூடுதல் ஒத்துழைப்பு தரவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close