[X] Close

யோகா வீடியோவுக்கு பைசா செலவழிக்கவில்லை!- பிரதமர் அலுவலகம் பதில்


no-expenditure-incurred-on-pm-s-fitness-video-pmo

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 Aug, 2018 12:45 pm
  • அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடி யோகா செய்து வெளியிடப்பட்ட வீடியோவை படமாக்க அரசு தரப்பில் எந்த செலவும் செய்யப்படவில்லை என பிரதமர் அலுவலகம் விளக்கியுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆர்டிஐ மனுவுக்கு பிரதமர் அலுவலகம் இவ்வாறு பதிலளித்துள்ளது.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் ஃபிட்னஸ் சேலஞ்ச் ஒன்றை ட்விட்டரில் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட கிரிக்கெட் வீரர் விராட் கோலி ட்விட்டரில் பிரதமரை டேக் செய்தார்.
பிரதமர் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு தான் யோகா பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் யோகா செய்வது, மூச்சு பயிற்சி மேற்கொள்வது என காட்சிகள் அடங்கியிருந்தன.
அந்த வீடியோ வைரலானது.

இது குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். பிரதமரின் யோகா வீடியோவை எடுக்க ரூ.35 லட்சம் அரசுப் பணம் செலவிடப்பட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில் இது தொடர்பான ஆர்டிஐ மனுவுக்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது. அதில், "பிரதமர் நரேந்திர மோடி யோகா செய்து வெளியிடப்பட்ட வீடியோவை எடுக்க அரசு தரப்பில் எந்த செலவும் செய்யப்படவில்லை. பிரதமரின் இல்லத்தில் பிரதமர் அலுவலக கேமராமேன் கொண்டு அந்த வீடியோ எடுக்கப்பட்டது" என விளக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close