[X] Close

கேரளாவின் மழை முகங்கள் 4: அவர்களிடம் ஸ்பைடர்மேன் இருக்கலாம்; எங்களிடம் ஃபிஷர்மென் இருக்கிறார்கள்


kerala-fishermen-row-hundreds-to-safety-twitter-salutes-biggest-heroes

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 Aug, 2018 16:32 pm
  • அ+ அ-

கேரளாவில் மீட்புப் பணியில் பெரும் பங்குவகித்தவர்கள் மீனவர்கள் என்றால் அது மிகையாகாது. படகில் ஏற தன் முதுகையே பாலமாக்கிய ஜெய்சால் போல் ஏராளமான மீனவர்கள் இன்றளவும் வெள்ளம் வடியாத பகுதிகளுக்குச் சென்று மக்களை மீட்பதும் நிவாரணப் பொருட்களை வழங்குவதுமாக இருக்கிறார்கள்.

பத்தனம்திட்டா, எர்ணாகுளம், திரிச்சூர் மாவட்டங்களில் மீட்புப் பணியில் மீனவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. மீனவர்கள்தான் கேரளாவின் மிக பிரபலமான மழை முகமாக இருக்கின்றனர்.
அவர்களை கேரள மக்கள் மட்டுமல்ல சமூகவலைதளத்தில் நெட்டிசன்களும் கொண்டாடி வருகின்றனர். சுவாரஸ்யமான மீம்களும் உலா வருகின்றன. அப்படியொரு மீம் கேரள மீனவர்களை சூப்பர்மேன் கேரக்டர்களுக்கு இணையாகக் கொண்டாடுகிறது.

"ஹாலிவுட்டில் ஸ்பைடர்மேன், பேட்மேன், ஐயர்ன்மேன் இருக்கிறார்கள். ஆனால், மலையாளிகள் எங்களுக்கு எல்லா சூப்பர்மேன்களும் ஒரே பெயரில் இருக்கின்றனர். அவர்கள்தான் ஃபிஷெர்மென்" என்று மீம் உருவாக்கப்பட்டுள்ளது.

ட்விட்டரில் ஒருவர்,

"பெயர்: தெரியாது
முகவரி: தெரியாது.
ஆனால், இதுநாள் வரை நாம் மீனவர்கள் என்று ஒட்டுமொத்தமாக அழைத்துக் கொண்டிருந்தவர்கள்தான் இன்று நம்மைக் காப்பாற்றியிருக்கிறார்கள் #KeralaFloods #KeralaFloodRelief"
எனப் பதிவிட்டுள்ளார்.

மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்துவிட்ட மீனவர்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் மனம் திறந்து பாராட்டி இருக்கிறார். மத்திய அமைச்சர் கே.ஜே.அல்ஃபோன்ஸ் மீனவர்களை மிகப்பெரிய ஹீரோக்கள் எனப் பாராட்டியிருக்கிறார்.

மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.3000 கூலி அளிக்க கேரள அரசு முன்வந்தும் அதை நிறைய மீனவர்கள் ஏற்க மறுத்துள்ளனர். 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close